தகுதியும் திறமையும் 81 இவர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை, ஒரு கணம் உங்கள் மனக் கண் முன்னால் கொண்டு வந்து பாருங்கள். அட்வகேட் மகன் சந்தானம் சரியாக 10-15- மணிக்குப் புறப்பட்டு ஆஸ்டின் காரிலே கல்லூரிக் குச் செல்கிறபோது, தகப்பனாரிடத்திலே தலை யைச் சொரிந்து பஸ்ஸஈக்கும் காபிக்கும் காசு வாங்கிக்கொண்டு 9-30 மணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பி, பஸ்ஸக்குக் காத்துக்கொண்டிருக்கும் சண்முகத்தைப் பார்த்து, ஜேய் ஹிந்த்- சொல்லி விட்டுத்தான் செல்கிறான். என்றைக்கேனும் ஒரு நாள் சண்முகத்துக்கும் சந்தானம் காரில் இடம் கிடைப்பதுண்டு. அதனால் ஒவ்வொரு நாளும், கார் நிற்குமா என்று எதிர்பார்த்து சண்முகம் ஏமாறவும் காரணமாகும். அந்தப் பாதையிலேயே நடப்பதில்லை குப் பன் மகன் இரத்தினம். அவனது ராஜ பாட் டையே, வயல் வழி - குறுக்குப்பாதை. வீட்டிலே அரை வயிறு கால் வயிறு மட்டுமே உண்டு, அத் துடன் அவிழ்த்து வைத்திருந்த ஆடையை உடுத் திக்கொண்டு, காலை 9-மணிக்கே புறப்பட்டு 3, 4- மைல் நடந்து வந்து கல்லூரியை அடைகிறான். வக்கீல் மகன் இடைவேளை உண்பது 'விருந்து'போலச் சிறக்கும்; குமாஸ்தா மகன் ஒரு வடை ஒரு காபியிலே ஆறுதல் அடைகிறான்; கூலிக்காரன் மகன், எவரேனும் நண்பர்கள் கூட் டிப்போன நாள் தவிர-புளியமரத்தடி காற்றிலே களைப்புப் போக்கிக்கொள்கிறான். பசி டைக்கும், வீட்டிலே உள்ள தம்பி தங்கையை எண்ணியவுடன் அது மறக்கும். காத மாலையானவுடன், வக்கீல் மகன் பீச்சு ரோட் டிலே காற்று வாங்கியபடி வீடு திரும்புவதும், 6
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/87
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
