82 வகுப்புரிமைப் போராட்டம் காபி சாப்பிட்டவுடன் சிறிது ஓய்வாக ரேடியோ வைத் திருப்புவதும், மணி 7-ஆனதும்-மின்சார விளக்குடன் விசிறியும் போட்டுவிட்டுப் படிக்க உட்காருவதும், கணக்கிலே சந்தேகம் என்றால் சின்ன அண்ணாவைக் கேட்பதும், ஆங்கிலம் என் றால் அக்காவிடம் கேட்பதும், பொது அரசியல் தெரிந்துகொள்ள அப்பாவிடம் பேசுவதும், சிறிது தலைவலி என்றால்,டாக்டர் அண்ணாவைக் கூப்பிடு வதும், மணிபத்து ஆனால் பால் சாப்பிட்டுப் படுக் கப்போவதும், கல்லூரியிலோ பிரின்ஸ்பால் வரை யிலே தெரிந்திருப்பதும், "சமஸ்கிருதத்திலே" படிக்காமலே மார்க்கு வாங்குவதும் அவனது படிப்பிலே உற்சாகமூட்டும் கருவிகளாகின்றன. கவலையோ எந்த வடிவிலேயும் அவனை நெருங்குவ தில்லை. உயர்தரத் தகுதி பெறமுடியும் என்ற நம் பிக்கைக்கோ குறைவில்லை. திடநம்பிக்கையோடு, ஆதரவும் கிடைப்பதால் அவன் அடையும் ஆநந் தத்துக்கோ அளவில்லை. அவன் 'படிப்பதற்குக் கேட்கவா வேண்டும்? குமஸ்தாவின் மகனோ, வீடு திரும்பியவுடன் காபிக்கு' வழி இல்லையே என்றெண்ணி உணவுக் குக் காத்திருப்பதும், அரிக்கன் லைட்டைத் துடைத்து ஏற்றிவைத்துப் படிக்க உட்காருவதும், பக்கத்திலே தம்பியும் தங்கையும் சத்தம்போட ஆரம்பிப்பதால் கோபப்படுவதும், சந்தேகம் ஏற் பட்டால் யாரையும் கேட்க வழிஇன்றித், திகைப்ப தும், எல்லாப் புத்தகங்களுங்கூட வாங்க முடியாத நிலையில் நாம் ஏன் குடும்பத்திற்குப் பாரமாகப் படிக்கவேண்டும், படிப்பை விட்டுவிட்டு ஏதேனும் வேலைக்குப் போய்விடலாமா என்று எண்ணுவ தும், நாம் அறிந்ததேதான். கூலிக்காரன் மகனோ, இருட்டும்போது குடிசை வந்தடைவதும், குடும்பத்தார் படும் வேத
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/88
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
