பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகுதியும் திறமையும் 88 னையைக் கண்டு துயரம் நெஞ்சை அடைக்க இர வல் புத்தகத்தைப் புரட்டுவதும், அகல் விளக்கு எரிந்தவரையிலே அதிலே படித்து அப்புறம் தெரு விளக்கிலே படிப்பதும், படுக்கப் பாய்தலையணை இன்றியும், உடுக்கப் போதுமான உடை இன்றி யும், பசி நீங்கப் போதுமான உணவின் றியும், குமு றல் அடங்காத மனத்தோடும், தான் படிப்பதே கூடத் தன் குடும்பத்திற்குச் செய்யும் கொடு மையே என்றெண்ணும்போது தோன்றும் பெரு மூச்சோடு கண்ணீர் விடுவதுமே அவன் படிப்ப தற்குள்ள சூழ்நிலை என்பதை மனமுள்ள எவரும் அறிவர். அழகிய மாளிகையிலே, ஆனந்தச் சூழ்நிலை யிலே, கூப்பிட்ட குரலுக்கு ஏவலர் இருக்க, அறி வாளர் நடுவிலே அனாயாசமாகப் படிக்கின்றான் ஒருவன். சிறியதொரு வீட்டிலே, தன்னளவு படித்த வரும் இல்லாத இடத்திலே, வீட்டிலே உள்ள பல தொல்லைகளிலேயும் பங்குகொண்டவனாகப் படிக் கின்றான் ஒருவன். காற்றோ,ஒளியோ புகமுடியாத ஒரு குடிசை யிலே, அன்றாடம் அவதியுறும் குடும்பத்திலே, தற் குறிகள் நடுவிலே வேதனை வெள்ளத்திலே தத்த ளித்தபடி - கவலைக் கடலிலே மூழ்கியபடி படிக் கின்றான், ஒருவன். வக்கீல் மகனுக்கோ, படிப்பு ஒரு உல்லாச ஓடம். குமாஸ்தாவின் மகனுக்கோ, படிப்பு ஒரு பாரவண்டி. கூலிக்காரன் மகனுக்கோ, படிப்பு ஒரு தலைச்சுமை பாராங்கல். படிப்பு, அனந்தாச்சாரியின் மகனுக்கு, ஒரு பழக்கமான பாதை. கோவிந்தசாமிப்பிள்ளை யின் மகனுக்கோ ஒரு புதிய பாதை. கூலிக்கா