தகுதியும் திறமைவும் 85 மறவாத வன்மையிருக்கும். ஆனால் இரண்டு பேரும் தேர்வில் ஒரே தகுதியைப் பெறும்படித் தான் விடையளிக்க முடியும். தேர்வுக்குச் சில நாட்கள் முன்பே ஏட்டைப் பிரித்தவன், பல மாதங்களாகப் பயின்றுள்ளவனுக்கு ஒப்பத் தேர்வு எழுதி, மறுநாளே மறந்தும்விடுகிறான். மேலும் கவலைகட்கு ஆட்படுகின்றவன் படித்த வற்றை மறக்க நேரிடுவதாலும், மன நிம்மதியுடை யவன், படித்ததை மறவாமல் இருக்க முடிவதா லும்,வாழ்க்கையிலே, சமூக நிலையிலே உள்ள ஏற் றத்தாழ்வும் ஒவ்வொருவரும் பெறக்கூடிய 'தகுதி' யைப் பெரிதும் பாதிக்கிறது. மற்றும், அறிவுக்கே சிறிதும் வேலை இன்றி எந்தப்பொருள் குறித்த தேர்வானாலும், அதற் காக வெளியிடப்படும் குறிப்பு ஏடுகளில் (Notes) உள்ள கேள்வி விடைகளை மட்டுமே படித்து- புரிந்தோ புரியாமலோ மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் நிலைமையில், 'உண்மைத் தகுதி யைத் தேர்வைக் கொண்டு எப்படி அறியமுடியும்? இப்படிப்பட்ட வாய்ப்பினால்தான், பரம்பரை யாக ஓதுவதும் நெட்டுரு செய்வதும் தொழிலாகக் கொண்ட பார்ப்பன வகுப்பார், உயர்தரக் கல்லூ ரிப் படிப்பு முடியும்வரையிலும் பெரிதும் 'தகுதி' மிக்கவர்களாகவே காட்சியளித்த போதிலும், அதன் பின்னர், வாழ்க்கையில், பார்ப்பனர்க ளின் கட்டுப்பாட்டையும் சாதி மனப்பான்மையை யும் கூடத் துளைத்து உயரும் அளவுக்கு, மற்ற வகுப்பாரிலே உள்ள கூர்த்தமதிபடைத்த நல்லறிஞர் களை, அவர்களால் எட்டிப் பிடிக்கவும் முடியவில்லை என்பது நன்றாக விளங்கும். இந்நிலையில் உண் மைத் தகுதியைத் தேர்வு காட்டுகின்றதா என்று எண்ணிப்பாருங்கள்.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/91
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
