86 வகுப்புரிமைப் போராட்டம் விடைத்தாள் மதிப்பீடு மற்றும், தேர்வுக்கு எழுதப்பட்ட விடைத் தாள்களை மதிப்பீடு செய்கையிலும், பல காரணங் களால் உண்மைத் தகுதி மறைந்தே போகிறது. நியாயமாகவே ஒரு பரிசோதகர் மதிப்பீடு செய்ய முயன்றாலும், அவருடைய மதக் கருத்துக்கள், அரசியல் சமூக இயல் கொள்கைகள் காரணமாகத் தன்னையும் அறியாமல் கொள்ள நேரிடும் விருப்பு வெறுப்புக்களால் ஒவ்வொரு விடைத்தாளின் மதிப்பும் மாற்றமடைந்து விடுகிறது. ஒரு விடைத்தாளை மதிப்பீடு செய்கையில் பரி சோதகரின் மன நிலை மகிழ்ச்சியாகவோ, கவலை யாகவோ இருப்பதைப் பொருத்தும், அந்த விடைத்தாளின் உண்மை மதிப்பு உயர்ந்தோ தாழ்ந்தோ போய்விடுகிறது. அதற்காகத்தான் தேர்வு எழுதியவர்களிற் சிலர் பரிசோதகரை அறிந்தால், மகிழ்ச்சியூட்டும்படி எதையேனும் அனுப்பிவைக்கிறார்கள் போலும். மேலும், பலருடைய விடைத்தாள்களைத் திருத் தும் பரிசோதகர், வரிசையாக மதிப்பீடு செய்து வருகையில் முதலில் ஒரு சிறந்த விடைத்தாளை மதிப்பிட்டுவிட்டு, அடுத்தாற்போல் ஒரு நடுத்தர விடைத்தாளை மதிப்பிட நேர்கையில், அதற்குரிய மதிப்பினும் குறைந்த மதிப்பே அளிக்க நேருவ தும், மிகவும் தாழ்ந்ததொரு விடைத்தாளைத் திருத் தியபின் - ஒரு நடுத்தர விடைத்தாளை மதிப்பிட நேர்கையில், அதற்குரிய மதிப்பினும் உயர்ந்த மதிப்பே அளிக்க அ நேர்வதும் உண்மையாகும். நூற்றுக்கணக்கான விடைத்தாள்களைத் திருத்து கின்றபோது இது ஒரு தொடர் கதையாகும். படி - ம் ஒரே நிலையிலே உள்ள விடைத்தாள்கள் எப் இரண்டுவிதமாக மதிப்பீடு பெற முடியும்
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/92
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
