88 வகுப்புரிமைப் போராட்டம் மதிப்பைப் பரிசோதகரே அறிய முடிவதில்லை. இவ்வுண்மையை, ஒரே விடைத்தாளை, ஒருவரே மதிப்பீடு செய்த நினைவின்றி, மறுமுறையும் மதிப் பீடு செய்வாரானால், இரு வெவ்வேறு மதிப்பைப் பெறுவதைக் கொண்டு கண்டுகொள்ளலாம். மதிப்பு சிறிதே வேறுபட்டாலும் இவ்வுண்மை மறுக்க முடியாததாகும். மற்றும் - பரிசோதகருக்கேற்பவே, விடைத் தாளும் மதிப்புப் பெறுகிறது என்பதை ஒரே விடைத்தாளை, இருவேறு பரிசோதகர் மதிப்பீடு செய்கையில் இரு வேறு மதிப்புக்கள் பெறுவது கொண்டு அறியலாம். இதனை, ஆனர்ஸ் தேர்வு களில், ஒவ்வொரு தாளையும் இருவர் மதிப்பீடு செய்துவருகையில், சில விடைத்தாள்களுக்கு இருவரிடமும் கிடைத்த மதிப்பு ஒன்றுக்கொன்று இரண்டு மூன்று மடங்காக இருந்ததால் (ஒருவர் 30 சதவிகிதம் எனவும் மற்றவர் 80 சதவிகிதம் எனவும் மதிப்பீடு செய்திருந்தமையால்) யாரேனும் ஒருவர் செய்திருக்கக் கூடிய அநீதியைத் தவிர்க்க. ஒன் றுக்கொன்று நூற்றுக்குப் பத்து மார்க்குகளுக்கு மேல் வித்தியாசமின்றி மதிப்பீடு ஒத்திருக்க வேண்டுமென அண்மையில், சென்னைப் பல்கலைக் கழகத்திலேயே முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் மேலும், ஒரு பரிசோதகரிடம், பல மாவட் டங்களைச் சேர்ந்த பல கல்லூரி விடைத் தாள்களும் மதிப்பீட்டிற்குப் போகின்ற போது ஒரு கல்லூரி மாணவரின், (ஒரு வட்டார மாணவரின்) சராசரி சராசரி தகுதியையே மனத்தில் கொண்டு மதிப்பீடு செய்ய நேருவதாலும் மற்றொரு வட்டாரக் கல்லூரி மாணவர்கள் அக் கல்லூரியில் அளிக்கப்படும் பயிற்சியின் தரத்திற்கேற்ப, தம் உண்மைத் தகுதியை-மதிப்பீட்டைப் பெற முடியா மல் போகிறது.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/94
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
