பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகுதியும் திறமையும் 89 இன்னும் ஒரு கல்லூரியைக் குறித்து வளர்ந் துள்ள கருத்துக்களுங்கூட, சில சமயங்களில் அக் கல்லூரி மாணவர்களின் பொதுத் தகுதியை உயர்த்தவோ குறைக்கவோ காரணமாகிவிடு கிறது. இவை யாவற்றினும் தேர்வு எழுதுகின்றவர் களில் மிகமிகச் சிலருக்கேனும், தேர்விலே வரக் கூடிய கேள்விகளோ, அதன் குறிப்புக்களோ எந்த விதமாகவோ கிடைக்கச் சந்தர்ப்பங்கள் உள்ளன என்பதைக் கண்ட பின்பும்- 'மதிப்பீட் டைக்' கொண்டு தகுதியை எப்படித் தீர்மானிக்க முடியும்? அந்த இப்படிக் கேள்விகளைப் பெறவும்கூட எந்த வகுப்பிற்கு அதிக வாய்ப்பு உள்ளதோ வகுப்புத்தானே, அதிக 'தகுதி' பெற்றவர்களைப் பெற்றிருக்கவும், அதன் பலனை அனுபவிக்கவும் முடியும்? மதிப்பீடும் தகுதியும் இனி, இந்த மதிப்பீடு சரியானபடியே தீர்மா னிக்கப்பட்டது என்று ஒப்புக்கொண்டாலும், துமட்டும் எப்படி ஒருவருடைய தகுதியை - முழுத் தகுதியைக் காட்டுவதாகும்? எப்படித் திற மையை வெளிப்படுத்தும்? எழுதுவதிலே விரைவும் திறனும் பெறாத சிலர், நேரடியாகப் பதில் சொல்வதில் வல்லவராக வும்; சொற்களினாலே கருத்தை நன்றாக வெளியிட முடியாத சிலர், நேர் முகப் பயிற்சியிலே (Prac- tice) திறன்மிக்கவராக இருப்பதையும் அறிவோம். சுறுசுறுப்புக் குறைவால் தேர்வில் 'தகுதி' பெற முடியாத சிலர், அமைதியோடு கூடிய விடா முயற் சியால், உண்மையில் தகுதி மிக்கவராக இருப்ப தையும் காண்கிறோம்.