90 வகுப்புரிமைப் போராட்டம் ஒரு துறையிலே பயில்கின்றவர் அத்துறை யிலே பயின்றுள்ளதைக் கொண்டு மட்டும் 'த யைத் தீர்மானிப்பதுங்கூடத் தவறாகும். ஏனெ னில் அறிவால் பயின்றுள்ளதைக் கைக்கொள் ளும் திறமும் பயன்படுத்தும் ஊக்கமும் கொண் டுள்ள அளவைப் பொருத்தே உண்மைத் தகுதி அமைகிறது. ஒரு துறையிலே சிறப்பறிவு பெற் றிருந்தாலும், மற்றுமுள்ள வாழ்க்கைத் துறை களைப்பற்றி அறிந்துள்ள அளவிற்கே, ஒருவன் உண்மைத் தகுதி பெற்றவனாவான். இவைகளை யெல்லாம் மதிப்பிடாமல், தேர்விலே பெறும் மதிப்பீட்டுத் 'தகுதி' மட்டும், ஒருவரின் தகுதி திறமையை எப்படிக் காட்ட முடியும்? மேல் நாடுகளில் எனவேதான், மேல்நாடுகளில், (எழுதப்படும்) தேர்வுக்குள்ள முக்கியத்துவத்தைக் குறைத்து, மாணவரின் தகுதியையும், திறமையையும் தீர்மா னிக்கும் முறையையே மாற்றிக்கொண்டுள்ளனர். ஒருவன் எழுதும் தேர்வைக்கொண்டு, ஒருவனது தகுதியில், நான்கில்-ஐந்தில், ஒரு பங்கைத்தான் தீர்மானிக்கின் றனர். மற்றப்படி ஒவ்வொருமாணவ ரிடத்திலும் பழகிய பேராசிரியர்கள் அவர்களது, கடமை யுணர்ச்சி, அறிவுத்திறன், உள்ளப்பாங்கு, உடற்கட்டு 'ஆகியவற்றைக்' கொண்டு அவர்க ளது 'தகுதி'யைத் தீர்மானிக்கிறார்கள். எக்காரணத்தாலோ, அம்முறை இங்கு கைக் கொள்ளப்படவில்லை. இங்கு கைக்கொள்ளப்பட் டாலும், இங்குள்ள சாதி வெறி, வகுப்பு வாதம், ஆதிக்க உணர்ச்சி, சுயநலம், குறுகிய மனப் கியவை காரண பான்மை, பழமை போதை மாக, பெரும்பாலான 96. மாணவர்கள், தமது உண்மைத் தகுதியைப் பெறத்தான் மாட்டார்கள்
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/96
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
