பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகுதியும் - திறமையும் 91 அம்முறையைக் கைக் கொள்வதற்கு ஏற்ற சூழ் நிலை இங்கில்லை. இந்நிலையில் தேர்வைக்கொண்டு, -அதில் பெறும் 'மதிப்பீட்டை'க் கொண்டு, தகுதி யைத் தீர்மானித்து அதற்கென கல்லூரிகளில் இடமும் ஒதுக்கினர், பிரகாசம் மந்திரி யினர். தேவைக்கேற்ற தகுதி சபை மேலும், எத்துறைக் கல்லூரியில் சேர்க்க இத் 'தகுதி' கேட்கப்பட்டதோ, அந்த மருத்துவம், பொறி இயல் கல்லூரிகளில் பயின்று வெளிவருப் வர்கள், அத்துறையில் முழுத்தகுதியும் பெற்று நாட்டிற்குப் பயன்படவேண்டுமேயானால், இந்தத் தேர்வுத் தகுதி எவ்வளவு தேவையோ அவ்வளவு, உடல் வலிவும் உள்ளக் கிளர்ச்சியும் உயர்ந்த நோக்கமும் ஆகிய ஒவ்வொன்றும் தேவையாகும். பணி நாளெல்லாம், வெய்யிலில் நின்றபடி யாற்றவும், நோயாளிகளையே பரிசோதித்தபடியும், அறுவை முதலிய வைத்தியம் செய்தபடியும் இருக்க, மூளைமட்டும் போதாது; உடல் வலிவும், அன்புள்ளமும், சகிப்புத்தன்மையும், பொது நலத் திலே ஆர்வமும் வேண்டும். இவையாவற்றினையும் மதிப்பீடு செய்யும்படி ஒருமுறை காணக்கூடுமா னால் அப்பொழுதே 'உண்மைத் தகுதி'யைக் கண் டறியமுடியும். அப்படியின்றி, இப்பொழுதுள்ள முறைப்படி, 'தகுதி' என்று ஏதோ ஒன்றைக் காட்டி, அதற்கு இடமளிப்பதே திறமையைக் காக் கும் வழி என்று கூறுவது, கண் தெரியாதவ னிடம் வெண்ணெய்' என்று 'சுண்ணாம்பைத்' தந்து, உடல் வலிவுக்கு அதையே விழுங்கச் சொன்ன தைப்போன்ற கொடுமையேயாகும். ஒரு டிற்கு இன்றியமையாத 'தகுதியும் திறமையும்' பாழாக விடக்கூடாது" என்பதற்காகவே, நாட் கம்