பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வகுப்புரிமைப் போராட்டம் யூனால் ஜீ.ஒ.வை எதிர்ப்பதாகக் கூறுவது உண் மையிலே இல்லாத ஆற்றிலே, ஓடாத தண்ணீ ரைத் தேக்காதது குற்றம் என்று பேசும் பித்த லாட்டமேயாகும். இனி, 'அவர்கள்' கூறுகிறபடி இத்தகுதியும் திறமையும் உண்மையானால், அவர்களுக்குக் கல் லூரியில் இடம் கிடைக்காததனாலேயே எப்படி வீணாகிவிடமுடியும்? அதுகாறும் பெற்றுள்ள தகுதி கல்வியில் பெற்றுள்ள பொதுத் தகுதி தானே? தகுதியும், திறமையும் தேவைப்படும் துறைகள் இன்னும் எவ்வளவோ உள்ளனவே? டாக்டராகவோ, இன்ஜினியராகவோ படித்தால் தவிர அவர்கள் திறமையை வேறு எத்துறையி லும் பயன்படுத்த முடியாதா? அவ்வளவுதானா அவர்களின் தகுதி, திறமை யெல்லாம்? பொதுத் தொண்டரிலிருந்து பொருளாதார நிபுணர் ஆகும் வரை, பத்திரிகாசிரியரிலிருந்து பாங்கி நிர்வா கம்வரை, ஆசிரியர் வேலையிலிருந்து அமைச்சரா வது வரை, எவ்வளவோ துறைகள், பணிகள் உள் ளனவே? இவற்றில் 'அவர்களின்' திறமையைப் பயன்படுத்தினால் பாபமா வந்து விடும்? ஆனால், அதே சமயத்தில் அவர்களே, சங்க ராச்சாரியாக, மகந்துவாக, ஜீயராக, புரோகித ராக, அர்ச்சகராக இருந்து நடத்தும் அந்த உயர்ந்த தொண்டுக்கு மட்டும், எந்தத் 'தகுதி யும்' 'திறமையும்' கவனிக்கப்படுவதில்லையே ஏன் என்று கேட்கத் தோன்றுகின்றது. அதற்குத் தான் 'ஜாதி'த் தகுதியும், 'ஏமாற்று'த் திறமையும் இருக்கவேண்டுமே என்று 'அவர்கள்' பதில் சொன்னால் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. தகுதியும் உரிமையும் ஒரு நாடு, முன்னேற எப்படித் தகுதியும் திற மையும் (அறியக்கூடுமானால்) பாழாகாது காப்