பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகுதியும் திறமையும் 93 பாற்றியாக வேண்டுமோ, அதைவிட முக்கியமாக எந்த ஒரு வகுப்பாரும், சமூகத்தாரும் தம் உரி மையை இழக்காமல் காத்தாகவேண்டும். தகுதி, திறமை உண்மையாகவே இருப்பினும், அதைக் காப்பதற்காக, எந்த ஒரு சமூகமும் மற்றொரு சமூ கத்திடம் அடிமைப்பட இடம் கொடுப்பதோ, சம சந்தர்ப்பம் இன்றி வாழ்வை இழக்க இடம் தரு வதோ நீதியும் நியாயமும் ஆகாது. நீதி நிலைக்காமல், தகுதியும் திறமையுமே ஆதிக்கம் பெறுவது, நீதிமன்றமும் போலீஸும் இல்லாத நாட்டில், தடியெடுத்தவனே தண்டல் காரன் ஆகின்ற நிலையையே தோற்றுவிக்கும். சம சந்தர்ப்பம் ஒரு நாடு நல்வாழ்வு பெற அந்நாட்டிலுள்ள எல்லாச் சமூகங்களும் நல்வாழ்வு பெறவேண்டும். "வாழ்ந்தால் முப்பது கோடி மக்களும் வாழ் வோம்" என்றார் பாரதியார். ஆனால், முப்பது வித வகுப்பாரும் வாழ்ந்தால்தான் நாடு வாழ முடி யும் என்பது மட்டும் முழு உண்மையாகும். இல்லை யாயின், அரசாங்கம் முன்னேறாது என்பதுமட்டு மல்ல, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்க ளின் உரிமை எழுச்சி காரணமாகப் - பலத்த குழப்பத்திற்கும், பிற்போக்கிற்குமே வழி தேடிக் கொண்டதாகும். வியாபாரி -கள்ள மார்க்கெட்டிலே கொள்ளை இலாபம் அடிக்கிறார். முதலாளி - மூலதனம் போட்டதாலேயே தொழிலாளரின் முதுகெ லும்பை முறித்துப் பொருளைக் குவிக்கிறார். மிட்டா தாரர்,உழவர் உழைப்பிலே கிடைத்த உணவுப் பொருளைப் பதுக்கி வைத்துப் பெரும் பொருள் திரட்டுகிறார். 'ஆபீசர்' இலஞ்சம் வாங்கியே சுக போக வாழ்வு நடத்துகிறார். அர்ச்சகர், ஆண்டவ