பக்கம்:வசந்த மல்லிகா.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

வஸந்தமல்லிகா

இங்கே கொண்டு வந்து சந்தோஷப்படுத்திக் கலியாணம் செய்து கொள்ளுகிறேன். இரண்டு கோடி பணமும், அழகான ஒரு பெண்ணும் ஒன்றாய் அகப்பட்டால் அது புளிக்குமோ? ஆனால் நீர் ஒரு காரியம் செய்ய வேண்டும். வஸந்தராயரைத் தேற்றிச் சமாதானப்படுத்தி, "தேடுகிறேன்" "தேடுகிறேன்" என்று சொல்லிக்கொண்டே வாரும். அதற்குள் நான் காரியத்தை முடித்து விடுகிறேன். தவிர, எனக்குச் செலவுக்குப் பணம் கொஞ்சம் வேண்டும்.

ஸகா : நீ சொல்வது நல்ல யோசனைதான். அப்படியே செய்வோம். இதோ ரூ.100/- இருக்கிறது. இதைக் கையில் வைத்துக் கொள். இன்னும் தேவையானாலும் பணம் நான் தருகிறேன். உன் விருப்பம்போலச் செய். ஆனால் காரியமானவுடன் என்னை மறந்து விடாதே - என்றான்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட பீமராவ், கிழவனை ஏமாற்றுவதில்லையென்று உறுதி சொல்லிவிட்டு எழுந்து வெளியிற் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/104&oldid=1231400" இலிருந்து மீள்விக்கப்பட்டது