பக்கம்:வசந்த மல்லிகா.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

வஸந்தமல்லிகா

"ஆகா! கடைசியாக இவள் இவ்விடத்திலா இருக்கிறாள்! இன்று என் நல்ல வேளைதான் இங்கு என்னைக் கொண்டு வந்து விட்டது!" என்று பெரிதும் மகிழ்ச்சியடைந்தவனாய், எப்போது நாடகம் முடியுமோவென்று. ஆவலுடன் எதிர்பார்த்திருந்தான். மல்லிகாவின் திறமையைக் கண்ட ஜனங்கள் ஒவ்வொரு காட்சியிலும் அவள் செய்த அற்புதச் செயல்களைத் திரும்பக் காண்பிக்கும்படி கேட்டுக் கொண்டமையால், அன்று நாடகம் முடிய இரவு பத்து மணிநேரமாயிற்று. அது முடிவடைந்தவுடன் பாயிஸாகேப்புகள் மல்லிகாவிற்கு ஒரு தங்கத் தோடாவைப் பரிசளித்தனர். அதன் பிறகு கூட்டம் கலைய, எல்லாரும் தத்தம் இருக்கைக்குச் சென்றனர். நாடகக் கொட்டகையின் பின் புறத்தில், நடிப்போரின் உபயோகத்திற்காக ஒரு சிறிய வழி விடப்பட்டிருந்தது. வழக்கமாகப் பீமராவ், அவ்விடத்திற்குப் போய் நின்று கொண்டிருந்து தமயந்தியை அழைத்துப்போவான்; அம்மாதிரியே அன்றைய தினம் அவ்விடத்திற்குப் போய் நின்று கொண்டிருந்தான். சற்று நேரத்தில் கிருஷ்ணவேணியும் மல்லிகாவும் வெளியில் வந்தார்கள். அதற்கு முன் அவளது தந்தை வந்திருப்பான். அன்றைய தினமும் அப்படியே வரும்படி கிருஷ்ணவேணி ஏற்பாடு செய்திருந்தாள். ஆகையால், அவன் வந்திருப்பான் என்னும் எண்ணத்தோடு ஆவலுடன் கிருஷ்ணவேணி நாற்புறங்களிலும் திரும்பிப் பார்த்தாள். அவன் எங்கும் காணப்படவில்லை. கால் நாழிகை நேரம் வரையில், அவர்கள் அங்கு நின்று அவனது வரவை எதிர்பார்த்தனர். அந்தச் சமயத்தில் அரண்மனை வேலைக்காரனொருவன் குடி வெறியினால் மயங்கி தட்டித் தடுமாறி ஆடிக் கொண்டு வந்து அவர்களுக்கெதிரில் கீழே விழுந்தான். அதைக்கண்ட மங்கையர்.இருவரும் அச்சங்கொண்டு நடுங்கி நின்றனர்.

நிகழ்ந்தவற்றை சற்று துரத்திலிருந்தபடியே கவ்னித்த பீமராவ் உடனே மெல்ல அவர்களுக்கெதிரில் வந்து, "கிருஷ்ண்வேணி பாயி! பயப்பட வேண்டாம்; நானிருக்கிறேன். இவ்ன் குடி வெறியினால் மயங்கி விழுந்திருக்கிறான். நீங்கள் வீட்டுக்குப் போகாமல் ஏன் நிற்கிறீர்கள்? எங்கே பெரியவர்?" என்றான். கிருஷ்ணவேணி அவனைக் கண்டு நாணமடைந்து சற்று தூரம் விலகினாள். ஆயினும், அந்தச்சமயத்தில் அவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/136&oldid=1232127" இலிருந்து மீள்விக்கப்பட்டது