பக்கம்:வசந்த மல்லிகா.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17-வது அதிகாரம்

கடைமுக ஸ்நானம்

ன்றாய்ப் பிரகாசித்துக் கொண்டிருந்த நிலவில் பீமராவ் பெரிதும் குதூகலமும் பூரிப்புமடைந்தவனாய்த் தன்னை மறந்து நடந்தான். தான் எவ்வளவோ பாடுபட்டு எத்தனையோ நாட்களாகத் தேடிய மல்லிகாவை தான் தற்செயலாகக் கண்டு பிடித்ததும், இரண்டொரு நாழிகைக்குள் அவளுடன் பழக்கம் செய்து கொண்டதும் தெய்வச் செயலினால் என்றே உறுதியாக மதித்தான். தனக்கு அவள் மனையாட்டியாக வாய்ப்பதற்கு அது நல்ல் சகுனமென்று நினைத்தான். அதுவரையில் அவளது ஏராளமான செல்வத்தைக் கருதியே அவளைத் தேடினான். அன்று அவளது பேரழகைக் கண்ட முதல் அவள் மீது கடுமோகங் கொண்டு எப்படியாகிலும் அவளைத் தான் மணந்தாலன்றித் தனக்கு இந்தப் பிறவியில் வேறு யாதொரு சார்த்தகமும் இல்லை என்று நினைத்தான். எவ்விதமாகிலும் தந்திரஞ் செய்து அவளது மனதைக் கவர எண்ணங் கொண்டான்.

மறுநாள் மாலை ஆறு மணிக்கே அவன் கிருஷ்ணவேணியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்; மங்கையர் இருவரும் அப்போது நாடகக் கொட்டகையில் இருப்பார்களென்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்ததாயினும், அவர்களில்லாத காலத்தில் வந்ததைக் கொண்டு, மல்லிகா தன்னை யோக்கியன் என்று மதிப்பாளென்று எண்ணினான், கிழவனுடன் ஒருமணி நேரம் வரையில் மிக்க அன்னியோன்னியமாகப் பேசிக் கொண்டிருந்தபின், "உமக்கு இன்னம் இரண்டு மூன்று நாட்களில் செளக்கியமாகி விடும். கடைமுக ஸ்நானம் இன்றைக்கு நான்காம் நாள் வருகிறது. நாமெல்லோரும் வேடிக்கையாக திருவையாற்றுக்குப் போய் காவிரி ஸ்நானம் செய்து விட்டுத் திரும்பி வருவோம். உம்முடைய தேகத்துக்கும் அது ஆரோக்கியமாக இருக்கும். நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/141&oldid=1232169" இலிருந்து மீள்விக்கப்பட்டது