பக்கம்:வசந்த மல்லிகா.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

வஸந்தமல்லிகா

யோடு உல்லாசமாகப் பொழுதப் போக்குகிறாரோவென்றுப் அவள் பலவாறு நினைத்து மெய்மறந்து நின்றாள். அவளுக்குத் தெரியாமல், பீமாராவ், அவளது முகத்தழகைக் காந்த விளக்கின் வெளிச்சத்தினால் நெடுநேரம் உற்று நோக்கினான். அவனது மனதில் பலவிதமான துன்மார்க்க நினைவுகள் தோன்றின. "இவளை மனைவியாக அடையாத ஜென்மமும் ஜென்மமா? இவளை அணையாத சரீரம் இருந்தென்ன இறந்தென்ன? தகாத காரியத்திச் செய்தாயினும் எப்படியாவது இவளை மனப்பதே புருஷார்த்தம்" என்று தமக்குள்ள தீர்மானம் செய்து கொண்டவனாய் விசனமே குடிகொண்ட அவளது முகம், பார்வை முதலியவற்றில் தனது வஞ்சக மொழியால், காதல் தீயை மூட முயன்றான்.

அன்றைய பகல் முழுதும் அலைந்த அலுப்பாலும், போஜன மிகுதியாலும், கிழவன் உடனே நித்திரையில் ஆழ்ந்து விட்டான். மேற்சொன்ன காரணங்களாலும், அன்று முழுதும் ஓயாத உற்சாகத்தையும் குதூகலத்தையும் காட்டியதாலும் கிருஷ்ணவேணியும் தளர்வடைந்து கடும் நித்திரையில் ஆழ்ந்து விட்டாள். பீமாராவ் ஒருவனே நித்திரை வராமையால் தவிப்பினைப் போல பாசாங்கு செய்து, "இவர்கள் எவ்வளவு பிரமாதமாகக் தூங்குகிறார்கள் பார்த்தாயா? எனக்கும் உனக்கும் ஏன் தூக்கம் வரமாட்டேனென்கிறது?" என்று சொல்லிக்கொண்டே மல்லிகா இருந்த இடத்திற்குச் சென்றான். அவள் திடுக்கிட்டு அவனைத் திரும்பி பார்த்தாள். அவளது கண்களிருந்து கண்ணீர் ஓடி வந்தது வெளிச்சத்தில் நன்றாக தெரிந்தது. அதை கண்ட பீமாராவ் மிகுந்த விசனத்தோடும், அன்போடும், "ஸஞ்சலாட்சி! ஏன் இப்படி விசனப்படுகிறாய்? உன்னைப் பார்க்க என் மனம் சகிக்கவில்லையே! ஆற்றைப் பார்ப்பதை போலத் திருப்பிக் கொண்டு ஏதோ பழைய சங்கதியை அனாவசியமாக நினைத்து விசனப்படுவது சரியா? " என்று சொல்லிக்கொண்டே அவளிடத்தில் நெருங்கினான்.

மல்லி : நான் விசனப்படுவதைக் காண உமக்கேன் விசனம் உண்டாகிறது? உமக்கென்ன குறைவிருக்கிறது? நீர் தங்கள் சந்தோஷத்தை குறைந்துக் கொள்வதேன்? நீர் எப்போதும் சந்தோஷ புருஷரென்று கிருஷ்ணவேணி அடிக்கடி சொல்லி இருக்காளே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/148&oldid=1232308" இலிருந்து மீள்விக்கப்பட்டது