பக்கம்:வசந்த மல்லிகா.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148வது அதிகாரம்

தமயந்தியும் வஸந்தராவும்

முன்னதிகாரத்தின் சங்கதிகள் நிகழ்ந்த ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு நாட் காலையில் வசந்தராவ் சென்னையில் கடற்கரையோரமாக மணலில் போய் கொண்டிருந்தார். அவர், பைத்தியக்காரனை போல எதையோ பார்ப்பதும், விசினப்படுவ்தும், பெருமூச்சு விடுவதும், தாமே பேசிக் கொள்வதும், கோபச் சிரிப்புக் கொள்வதுமாக நடந்தார். அப்போது, அருகிலிருந்த பாட்டையில் வந்து கொண்டிருந்த ஒரு வண்டியில் பூட்டப்பட்டிருந்த குதிரை எதையோ பார்த்து மிரண்டு, வண்டியை முன்னால் இழுத்துச் செல்லாமல், திடீரென்று நின்று பின்புறத்திலும், வலப் பக்கத்திலும், இடப் பக்கத்திலும் தள்ள ஆரம்பித்தது. வண்டிக்காரன் அதை அடக்கி முன்னால் நடத்த எவ்வளவு முயன்றும் அது பலிக்கவில்லை. கடைசியாக வண்டி ஒரு பெருத்த பள்ளத்திற்குள் போய் விழுந்து விடும்போலிருந்தது. அதைக் கண்டவுடன் வண்டிக்குள்ளிருந்த ஒரு ஸ்திரீ கோவெனக் கூச்சலிட ஆரம்பித்தாள்.

அந்தக் கூக்குரலைக் கேட்ட வஸந்தராவ் திடுக்கிட்டு, ஒடோடியும் சென்று, குதிரையின் கடிவாளத்தைப் பிடித்திழுத்து வண்டியைப் பாட்டையின் நடுவிற்குக் கொண்டு வந்து விட்ட பிறகு, உள்ளே பார்க்க, தமயந்திபாய் வண்டிக்குள் இருந்ததைக் கண்டு திகைப்படைந்தார். அவள் தஞ்சையில் கம்பியிலிருந்து வீழ்ந்து அடிபட்டு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட பிறகு சொற்ப காலம் அங்கிருந்தாள். அவ்விடத்தில் சீக்கிரம் செளக்கியமாகாதென்னும் காரணத்தினால் அவள் சென்னையில் பெரிய வைத்தியசாலைக்குக் கொண்டு போகப்பட்டாள். அங்கே பல வாரங்கள் இருந்த பின் அவளது உடம்பு நன்றாக செளக்கியமடைந்தது. என்றாலும், தினந்தினம் கடற்கரையில் காற்று வாங்கினால் தேகத்தில் பலமுண்டாகும் என்று வைத்தியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/152&oldid=1232230" இலிருந்து மீள்விக்கப்பட்டது