பக்கம்:வசந்த மல்லிகா.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

வஸந்தமல்லிகா

சதாரம் என்னும் நாடகம் நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன், கடைசி ஒத்திகை நடந்தது. அன்று மல்லிகா மிகவும் திறமையாக நடித்ததைக் கண்ட கோவிந்தசாமி ராவ், "இன்றைக்கே இவ்வளவு நன்றாக இருக்கிறதாகையால், நாடகம் கடைசி நாளில் முதல் தரமாக இருக்கும். ஆனால், உனக்கு எல்லாம் வைர நகைகளாய் இருக்க வேண்டும். இங்கிருக்கும் நகைகளில் சிறந்தவைகளை நான் உனக்காகப் பொறுக்கி வைக்கிறேன்” என்று சொல்லி முடித்தார். அங்கு காத்திருந்த பீமராவ் அதன் பிறகு அவர்களை அழைத்துக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான்.

மறுநாட் காலையில் பீமராவ் அவர்களது வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டவுடன் கிருஷ்ணவேணி குதூகலமாக மெத்தைக்கு ஓடினாள். அதைக் கண்ட பீமராவ், "மல்லிகா படித்துக் கொண்டிருந்தால் அதைக் கெடுக்க வேண்டாம்" என்றான்.

"புருஷனிடத்தில் உல்லாஸமாகப் பேசுவதைவிட படிப்பது தான் இன்பமோ?" என்று பரிஹாஸமாகப் பேசிக் கொண்டே கிருஷ்ணவேணி மேலே போய் மல்லிகாவைக் கீழே அனுப்பினாள்.

கீழே இறங்கி வந்த மல்லிகாவைக் காணும் போதே பீமராவின் முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது.

"ஸஞ்சலம்! நீ சதாரமாக வந்து நடிக்கும் போது, அது எவ்வளவு அழகாக இருக்கும் என்பதை இப்போதே நான் மனசால் பாவித்தேன்; ஆகா! நான் அடையும் பிரம்மாநந்தத்தை என்னவென்று சொல்வேன்! கடைசி ஒத்திகையில் நீ நடித்ததில் பாதி நடித்தாலும், அது நேத்திராநந்தமாக இருக்கும்" என்றான்.

மல்லி : (நாணத்தோடு) நன்றாயில்லாமல் போனால் எவ்வளவு அவமானம் உண்டாகும்! அதன் பிறகு நான் வாத்தியார் முகத்திலும் விழிக்க மாட்டேன் - என்றாள்.

பீமராவ் : கண்ணே ! அதிருக்கட்டும்; இதோ பார். இதில் வாத்தியார் சொன்னபடி வைர நகைகள் இருக்கின்றன - என்று கூறிய வண்ணம் ஒரு சிறிய நகைப்பெட்டியை அவளிடம் கொடுத்தான். அதை மல்லிகா மெதுவாக எடுத்துத் திறந்தாள்; அதற்குள்ளிருந்த நகைகளைக் கண்டு மூக்கின் மேல் விரலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/172&oldid=1233836" இலிருந்து மீள்விக்கப்பட்டது