பக்கம்:வசந்த மல்லிகா.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வைரத்தினும் கடிய மனம்

155

வைத்து, "என்ன அழகு! என்ன ஜ்வலிப்பு! பளபளவென்று நட்சத்திரங்களைப் போலிருக்கின்றனவே! காதுக்குக் கம்மல், மாட்டல், மூக்குப் பொட்டு, கழுத்துக்குப் பதக்கம், அட்டிகை, நெற்றிச்சரம், ஆகா! எத்தனை நகைகள்! எல்லாம் பூர்த்தியாக இருக்கின்றனவே! இவைகளைப் பார்ப்பவர் உண்மையான வைர மென்று சொல்வார்களே அன்றி, சூது நகைகளென்று ஒருகாலும் சொல்ல மாட்டார்கள். வாத்தியார் என்மேல் எவ்வளவு அபிமானம் வைத்திருக்கிறார்.! - என்றாள்.

பீம : வாத்தியார் என்பதற்குப் பதில் பீமராவ் என்று மாற்றிச் சொல்ல வேண்டும் - என்றான்.

மல்லி : (ஆச்சரியத்துடன்) அப்படியானால் இவைகளை நீங்களா வாங்கினீர்கள்? எவ்வளவு நன்றாயிருக்கின்றன! உண்மை வைரமா? அல்லது சூது வைரமா?

பீம : (புன்சிரிப்புடன்) உண்மை வைரங்கள்!

மல்லி : (ஆச்சரியத்துடன்) அப்படியானால் இவைகளின் விலை ஆயிரக்கணக்கில் இருக்குமே! இவ்வளவு விலையில் ஏன் வாங்க வேண்டும்? இவைகள் ராஜ ஸ்திரீகளுக்கல்லவா தகுந்தவையாய்க் காணப்படுகின்றன. சாதாரண மனுஷியான எனக்கு இவைகளால் என்ன உபயோகம்?

பீம : நீ என்னுடைய ராஜாத்தியல்லவா? இவைகளை அணியத்தகுந்தவள் உன்னைக் காட்டிலும் மேலானவள் எவள் இருக்கிறாள்? அழகில் ஆந்தையை வெல்லும் பெண்கள் எல்லாம் எவ்வளவோ அகம்பாவங் கொண்டு மினுக்கிக் குலுக்கி மயக்குகிறார்களே. உன்னுடைய மேன்மை உனக்குத் தெரியவில்லையே? என்றான்.

அதைக் கேட்ட மல்லிகா அவனையும் நகைகளையும் மாறி மாறிப் பார்த்து, "நீங்கள் இவ்வளவு ஐசுவரியந்தரென்று நான் இதுவரையில் நினைக்கவே இல்லை" என்றாள்.

"ஏதோ ஈசுவரன் தயவால் கொஞ்சம் ஐசுவரியமிருக்கிறது; உன்னை மாத்திரம் அடைந்து விடுவேனாகில், எனக்கு மிஞ்சிய தனவந்தன் ஒருவனும் இருக்க மாட்டான்" என்று புன்சிரிப்போடு இரண்டு பொருள்பட மொழிந்தான். அவன் தன் மீது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/173&oldid=1233837" இலிருந்து மீள்விக்கப்பட்டது