பக்கம்:வசந்த மல்லிகா.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்கினி பகவானுக்கு விருந்து

161

அவ்விடத்திலும் இருப்பதைக் காணவே, அவர் தமக்கு உண்மையில் பைத்தியம் பிடித்து விட்டதாக மதித்தார். “நான் உண்மையில் நாடகம் பார்க்கிறேனா? அல்லது என்னுடைய ஜாகையில் உள்ள படத்தைப் பற்றிக் கனவு காண்கிறேனா?" என்று திகைத்தார். தமது கண்களை நம்பாமல் அவற்றை நன்றாகத் துடைத்துக் கொண்டார். சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்து திரும்பவும் அவைகளைத் திறந்து பார்த்தார். அதே வடிவம் மாறாமல் மேன் மாடத்தில் இருந்தது. அவள் பேசிய குரல் குயிலோசையைப் போல அவரது காதில் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது. வஸந்தராவினால் அழைத்து வரப்பட்ட மங்கையின் குரலும் அந்தக் குரலும் ஒன்றாகயிருந்தன. வஸந்தராவ் அழைத்து வந்தவளே ஸஞ்சலாட்சி என்றும், தாம் விடுவித்த பிறகு, அவள் நாடகத்தில் சேர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் உத்தேசித்தார்.

அவ்விதம் நினைத்து அவர் இமை கொட்டாமல் அவளையே உற்று நோக்கியவண்ணம் இருந்தார். அப்போது இருளைக் காண்பிக்கும் பொருட்டு விளக்குகள் எல்லாம் பக்கப் படுதாக்களுக்கு அப்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. தற்செயலாக மோகனராவ் ஒரு பக்கப் படுதாவை பார்த்தபோது புகையைப் போன்ற ஏதோ வஸ்து கொடி போலக் கிளம்பியதை அவர் கவனித்தார். அது படிப்படியாய்ப் பெரியதாகத் தெரிந்தது. அவள் மீதிருந்த தமது நினைவை அவர் அப்போதே அதன் மேல் திருப்பி அது என்னவென்று கவனித்தார். புகையெழுந்த இடத்திலிருந்து பக்கப் படுதாவில் அடுத்த நிமிஷத்தில் நெருப்புப் பற்றிக் குபீரென்று எரிய ஆரம்பித்து மேல் கூரை வரையில் எட்டிக் கொட்டகையிலும் நெருப்புப் பிடித்துக் கொண்டது. அப்போதுதான் ஜனங்களும் அதைக் கவனித்தார்கள். உடனே எல்லோரும் 'நெருப்பு! நெருப்பு!" என்று கூச்சலிட, அந்த ஓசை சமுத்திர கோஷத்தைப் போல எழுந்தது. எல்லோரும் அஞ்சித் திகைத்து தத்தம் இடத்திலிருந்து அவசரமாக எழுந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் எண்ணத்துடன் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு வெளியில் ஓட முயன்றார்கள். ஒருவர் மீது ஒருவர் விழுந்து துகையலாயினர். நாற்காலிகளின் கீழ் மனிதரும் மனிதரின் மேல் நாற்காலிகளுமாக உருண்டு, எழுந்திருக்கக்

வ.ம.-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/179&oldid=1233847" இலிருந்து மீள்விக்கப்பட்டது