பக்கம்:வசந்த மல்லிகா.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

வஸந்தமல்லிகா

போனது பற்றி நெடுமூச்செறிந்து கண்ணீர் விடுத்துக் கலங்கினார். அதுவரையில், அவள் ஒருத்தி மீதே முதல் பார்வையில் அவருக்கு விருப்பமுண்டாயிற்று. தஞ்சையிலிருந்த மகா சிறப்பும் வனப்பும் வாய்ந்த எத்தனையோ பெண்களிடத்திலும் அவருக்கு அவ்வளவு பிரேமை உண்டானதேயில்லை. அவ்வளவு விசேஷமான சிறப்பையும் வசீகரத்தன்மையையும் பெற்ற ஸ்திரீ தமக்கு இல்லாமற் போனது, இந்த உலகமே அவருக்குப் பாழ்த்துப் போனதாகத் தோன்றியது. இனி தாம் உயிரை வைத்திருப்பதில் தமக்கு யாதொரு சுகமுமில்லையென்று பலவாறு நினைத்து அவர் ஆறாத் துயரில் ஆழ்ந்தார். ஆனால், அத்தனை துன்பங்களிலும் தமது ஆப்த நண்பனான பீமராவுக்கு அவள் வாய்த்தது ஒருவித ஆறுதலாக இருந்தது. அவ்வாறு நினைத்தபடியே அவர் நெடுநேரம் சயனித்திருந்தது, நிரம்பவும் தளர்ச்சியடைந்தவராய் அவளது நினைவை ஒழித்துவிட வேண்டுமென்று உறுதி செய்து கொண்டவராய் உடனே எழுந்து, பீரோவிலிருந்த படத்தை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு, இமை கொட்டாமல் அதை நோக்கியவண்ணமிருந்தார். கடைசி முறையாக அதை ஒருதரம் முத்தமிட வேண்டுமென்னும் ஆசை அவரது மனத்தில் உதித்தது. சே! பிறனுடைய மனைவியை முத்தமிட நினைப்பது பிசகு! அந்த ஸுகமும் ஒரு ஸுகமாகுமா? அது பெருத்த பாவமேயன்றி ஒருநாளும் இன்பமாகாது" என்று தமக்குள் வாதித்து தம்மைத் தாமே கண்டித்து அந்த ஆசையை அடக்கிக் கொண்டார். "அடி! என் பேடன்னமே! எப்போதும் விசனமும் புன்சிரிப்பும் நீங்காத உன்னுடைய முகம் இனி என்னுடையதல்ல. நீ வேறொருவனுடைய பொருளாய் விட்டாய். இதுவரையில் நான் உன்னோடு தனிமையில் பேசிக் கொஞ்சிக் குலாவியதைப் போல் இனிமேலும் செய்வது தவறு. உன்னை நான் வைத்திருந்தால், என் மனசில் துன்மார்க்கமான நினைவுகள் உண்டாகின்றன. ஏ பூங்கொடியே! நீயும் நானும் இனி அரைநொடியும் ஒன்றாயிருக்க முடியாது. நாம் உடனே பிரிந்து போவதே உத்தமம்" என்று கூறியவண்ணம், கரைகடந்த விசனம் கொண்டவராய், அந்தப் படத்திலிருந்த ஆணிகளைக் கழற்றிவிட்டு, சட்டத்தை ஒவ்வொன்றாகப் பிரித்து எதிரில் எரிந்து கொண்டிருந்த வெந்நீர் அடுப்பில் எறிந்தார். அவர் அதன் நான்கு சட்டங்களையும் பிடுங்கவே, படம் வேறு கண்ணாடி வேறு பின்புறத்திலிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/194&oldid=1233939" இலிருந்து மீள்விக்கப்பட்டது