பக்கம்:வசந்த மல்லிகா.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மல்லிகாவின் மூன்றாம் கணவன்

177

பலகை வேறாய்ப் போயின. ஆனால் படத்திற்கும், பலகைக்கும் இடையில் இருந்த ஒரு காகித மடிப்பு அப்போது கீழே விழுந்தது. அதைக் கண்ட மோகனராவ், வியப்பும் திகைப்பும் அடைந்து அதை எடுத்துப் பிரித்தார். அதற்குள் ஒரு தஸ்தாவேஜு நிரம்ப வும் ஒழுங்காக மடித்து வைக்கப்பட்டிருந்தது. அவரது ஆச்சரியம் முன்னிலும் அதிகரித்தது. அவர் உடனே அதைப் பிரித்து, அதில் எழுதப்பட்டிருந்தது என்ன என்பதைக் கவனித்துப் படித்தார். "பவானியம்மாள்புரத்து ஜெமீந்தார் பரசுராமபாவா எழுதிய மரணாந்த சாஸனம்" என்று அது ஆரம்பித்தது. "அடடா! இதென்ன கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது போலிருக்கிறது!" என்று அதிசயித்துக் கல்லாய்ச் சமைந்து உட்கார்ந்து விட்டார்.

வ.ம.-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/195&oldid=1233940" இலிருந்து மீள்விக்கப்பட்டது