பக்கம்:வசந்த மல்லிகா.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பக்காத் திருடன்

179

படம், சாஸனம் முதலியவற்றை அவர் சுத்தமாக மறந்து விட்டார். அவர் வெளியிற் போய் வண்டி குதிரை முதலியவற்றை நன்றாகச் சோதனை செய்து பார்த்த பின், குதிரையின் ஓட்டத் தைப் பரீட்சை செய்ய எண்ணி 10, 12 மைல் தூரம் சவாரி செய்து பார்க்க வேண்டும் என்று ஸாயப்புவிடம் தெரிவிக்க, அவன் அதற்கு இணங்க, இருவரும் வண்டியில் உட்கார்ந்து கொண்டார்கள். உடனே ஸாயப்பு வண்டியை ஓட்டிக் கொண்டு போய் விட்டான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அவரது வேலைக்காரன் வெந்நீர் அடுப்பைப் பார்க்கும் பொருட்டு உள்ளே சென்றான். அது எரியாமலிருந்ததைக் கண்டு, பக்கங்களில் விலக்கிக் கிடந்த படத்தின் சட்டங்களையும், விறகுகளையும் காகிதத் துண்டுகளையும் அவன் பொறுக்கி அடுப்பில் போட்டு, அதை எறியச் செய்துவிட்டு வெளியில் வந்து உட்கார்ந்தான். அப்போது பீமராவ் அவனிடம் வந்து, "எஜமான் எங்கே?" என்று வினவினான். அவர் போன விவரத்தை வேலைக்காரன் தெரிவித்தான். தனது கலியாண விஷயத்தை அவரிடம் தெரிவித்து, தனது மனைவியின் உயிரை அவர் காப்பாற்றியதைக் குறித்து அவரை ஸ்தோத்திரம் செய்துவிட்டுப் போக எண்ணி பீமராவ் அவ்விடத்திற்கு வந்தான். வேலைக்காரனது சொல்லைக் கேட்ட பீமராவ், "எஜமானர் வேறு எங்கேயும் போகவில்லையே? சீக்கிரம் வந்து விடுவாரல்லவா?" என்றான்.

"இன்னும் அரை நாழிகையில் வந்து விடுவார். உள்ளே போய் உட்காருங்கள்" என்றான் வேலைக்காரன்.

உடனே பீமராவ் மோகனராவின் அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து, அவரது வரவை எதிர்பார்த்திருந்தான். அவ்வாறு அரை நாழிகை நேரம் கழிந்தது; சும்மா உட்கார்ந்திருந்தது, அவனுக்கு மிக்க துன்பகரமாய் இருந்தமையால், அவன் எழுந்து அந்த அறையில் உலாவத் தொடங்கினான். அங்கிருந்த பீரோ, ஓர் ஆள் உயரத்திற்குக் குறைவாக இருந்தமையால், அதன் மேற்புறத்தை அவன் தற் செயலாகப் பார்க்க அவ்விடத்திலிருந்த படத்தைக் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/197&oldid=1233942" இலிருந்து மீள்விக்கப்பட்டது