பக்கம்:வசந்த மல்லிகா.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பக்காத் திருடன்

185

எப்படிப் போனது? அந்த மடையன் வேலைக்காரன்தான் கொளுத்தியிருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வேலைக்காரனது பெயரைச் சொல்லி உரக்கக் கூவி அவனை அழைத்தார். வேலைக்காரன் திடுக்கிட்டு உள்ளே ஓடிவந்து கைகட்டி நடுநடுங்கி எதிரில் நின்றான்.

மோக : (அதட்டி) நான் வெளியில் போன பிறகு நீ எதை பாவது அடுப்பில் போட்டுக் கொளுத்தினாயா?

வேலை : (நடுக்கத்தோடு) ஆம்; எஜமானே! அடுப்பு பணைந்து போயிருந்தது. ஒதுங்கிக் கிடந்த சட்டம் விறகு காதலியவைகளை உள்ளே தள்ளி எரிய விட்டேன்.

மோக : காகிதம் ஏதாவது போட்டயா?

வேலை : ஆம்; உபயோகமற்றுக் கிழித்துப் போடப்பட்ட காகிதங்களை எடுத்துப் போட்டேன் - என்றான்.

அதைக் கேட்ட மோகனராவுக்கு அவன் மீது பெரிதும் கோபமுண்டாயிற்று. "அதில் நாலைந்து காகிதங்கள் ஒன்றாகத் தைக்கப்பட்ட கிழியாத மடிப்பு ஏதாவது இருந்ததா?" என்று அதட்டிக் கேட்டார்.

வேலை : (நிரம்பவும் பயத்தோடு) இல்லை எஜமானே! நான் கவனித்துப் பார்க்கவில்லை. இங்கே கிடந்த காகிதங்களை ஒன்றாகச் சேர்த்து அப்படியே போட்டு விட்டேன்.

மோக : (நிரம்பவும் கோபத்தோடு) மடையா! போ அப்பால் எனக்கு முன்பாக நிற்காதே - என்று கூறி அதட்டினார்.

வழக்கத்திற்கு மாறாக அவர் அன்று அவ்விதம் தன்னைக் கோபித்துக் கொண்டதைக் கண்ட வேலைக்காரன் பெரிதும் அஞ்சி நடுநடுங்கி வெளியில் போய்விட்டான்.

ஜெமீந்தார் நிரம்பவும் விசனமடைந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சிந்தனை செய்யத் தொடங்கினார். பீமராவ் அவரை நோக்கி நகைத்து, "இதென்ன! இதைப் பற்றி இவ்வளவு கவலைப்படுகிறீர்களே! இது முடிவான தஸ்தாவேஜி அல்ல; நகல் தயார் செய்து எறியப்பட்டதாய் இருக்கும். படதுக்கு ஆதாரமாக காகிதம் வைப்பது வழக்கமல்லவா; உபயாகமற்ற இந்த நகல் வைக்கப்பட்டிருக்கலாம்; இது ஏதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/203&oldid=1233947" இலிருந்து மீள்விக்கப்பட்டது