பக்கம்:வசந்த மல்லிகா.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பேய்களும் பெண்மானும்

3

செய்துவிட்டாள்; இதெல்லாம் இவளுக்கு நம்முடைய அப்பா கொடுக்கிற இடமல்லவா! யாரோடு பேசினாலும் இவள் குழந்தையைப் போலக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்போது எனக்கு எவ்வளவு எரிச்சலுண்டாகிறது தெரியுமா? அப்படியே இவளுடைய கன்னத்தில் ஓங்கிப் பளீரென்று அடிக்க வேண்டுமென்னும் எண்ணம் உதிக்கிறது.

ஸீதா : நம்முடைய அப்பாவுக்கு இவள்மேல் அவ்வளவு பிரியம் உண்டாவதற்குக் காரணமென்ன? அவர் ஏன் இதை யெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்கிறார்?

கமலா : அப்பா இவளிடத்தில் பிரியமாயிருப்பதாக வெளிக்கு மாத்திரம் காட்டுகிறாரேயொழிய உண்மையில் அவருக்கு இவளிடத்தில் பிரியமில்லை; வெறுப்புதான்.

ஸீதா : அப்படியானால், மனசுக்குப் பிடிக்காத கழுதையை ஏன் நம்முடைய வீட்டில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?

கமலா: ரகஸியம் உனக்குத் தெரியாது. அதனால் நீ இப்படிப் பேசுகிறாய். நம்முடைய அப்பாவும் இவளுடைய தகப்பனும் பூனாதேசத்து அரண்மனையில் ஒரே இடத்தில் வேலையிலிருந்த சிநேகிதர்கள். இவளுடைய தகப்பன் இறந்தபோது, இவள் குழந்தையாயிருந்தாள். இவளுக்குத் தாய் முதலிய பாதுகாப்பவர் எவருமில்லாமையால் இவளுடைய தகப்பன் இவளை நம்முடைய அப்பாவிடத்தில் ஒப்புவித்தான்; அவனுக்கிருந்த சொத்துக்களை, பங்காளிக்குப் பயந்து நம்முடைய அப்பாவின் பேரில் எழுதி வைத்தான். அதிலிருந்து வரும் வட்டிப் பணத்தை வாங்கி இவளுடைய செலவுக்கு வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவன் இறந்து போனான். இவளுக்கு அதனால் மாசம் ஒன்றுக்கு 35-ரூபா வருமானங் கிடைக்கிறது. நம்முடைய அப்பாவுக்கு வயதாய்விட்டதென்று உபகாரச் சம்பளத்துக்குப் பதிலாக இந்த ஊரில் விடப்பட்டிருக்கும் மானிய நிலம் நமக்குப் போதாததாயிருப்பதால், இவளுடைய பணமில்லாவிட்டால் நம்முடைய காலஷேபம் நடப்பது கடினம். தவிர, இவள் நம்முடைய வீட்டில் வேலைக்காரி வைக்க வேண்டிய அவசியமில்லாமல் எல்லாக் காரியங்களையும் செய்வதற்கு உபயோகப்படுகிறாள். இவைகளை உத்தேசித்தே நம்முடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/21&oldid=1229122" இலிருந்து மீள்விக்கப்பட்டது