பக்கம்:வசந்த மல்லிகா.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சகத்தை வென்ற வஞ்சி

211

மூழ்கி தன்னை மறந்திருந்த மல்லிகாவைப் பார்த்து, "கண்ணே! ஆருயிரே! உனக்கென்ன விசனம்? விடிந்தால் கல்யாணம். நீ இப்படி அழலாமா? என்ன ஆச்சரியமாக இருக்கிறதே!" என்று அன்பாகவும் அருமையாகவும் கூறியவண்ணம் அவன் அவளுக்கு அருகில் நெருங்கினான்.

அவனைக் கண்ட மல்லிகா திடுக்கிட்டெழுந்து நின்று, "நான் அழுது கொண்டா இருக்கிறேன்? இல்லையே. ஏதோ யோசனை செய்து கொண்டிருந்தேன்' என்றாள்.

பீம : எதைப்பற்றி யோசனை செய்கிறாய்?

மல்லி : நாளைய தினத்தைப் பற்றித்தான்.

பீம : அதைப் பற்றி என்ன யோசனை? உன் மனசில் ஏதாவது குறையிருந்தால், அதை உடனே நிவர்த்தி செய்கிறேன். நீ இப்படி வருத்தப்படுவதைக் கண்டு, நான் அரை க்ஷணமும் ஸகிக்க மாட்டேன்.

மல்லி : என்னவோ பைத்தியக்கார யோசனை செய்து கொண்டிருந்தேன். அதை ஏன் கேட்க வேண்டும்?

பீம : (அன்போடும் விசனத்தோடும் ) அடி என் தங்கமே! நான் கலியாணம் செய்து கொள்ள ஆரம்பிக்கும் போதே ஒருவர்க்கொருவர் விஷயங்களை மறைத்து ரகஸியமாக வைத்துக் கொள்வது சரியல்ல. உன்னுடைய விசனத்தை வெளிப்படையாகத் தெரிவி; உன் முகங்கோண நான் ஒரு க்ஷணமும் பார்க்க மாட்டேன்.

மல்லி : இவ்வளவு அன்பும் ஆசையும் வைத்த உங்களுக்குத் தகுந்த விதத்தில் கைம்மாறு செய்ய முடியவில்லை என்பதே என்னுடைய விசனம். நான் உங்களுக்கு நன்மையைச் செய்யாமல் தீமையைச் செய்வதைப் பற்றி வருந்துகிறேன்.

பீம : நீ எனக்கு வேறு என்னவிதமான கைம்மாறுதான் செய்ய வேண்டும்? இன்பக் களஞ்சியமான உன்னையே நீ எனக்கு சன் மானமாகக் கொடுக்கிறாயே!

மல்லி : அதுதான் தவறான எண்ணம். நான் இன்பக் களஞ்சியமாக இருந்தால் நீங்கள் சொல்வது சரிதான். நான் துன்பக் களஞ்சியமாக அல்லவா இருக்கிறேன். ஒரு பெண்ணைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/229&oldid=1234008" இலிருந்து மீள்விக்கப்பட்டது