பக்கம்:வசந்த மல்லிகா.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சகத்தை வென்ற வஞ்சி

217

அதைக் கேட்ட மல்லிகா பெரிதும் வேதனை அடைந்தவளாய், "நானே போகிறேன்" என்று சொல்லியவண்ணம் கீழே இறங்க முயன்றாள்.

"இரு, இரு, போக வேண்டாம். இன்னம் ஒரே நிமிஷம்; உன்னுடைய நன்மைக்குத்தான். ஆகா! எனக்குத் தெரிந்த விஷயங்கள் உனக்குத் தெரிந்திருந்தால் நீ இப்படி இருப்பாயா! நாளைக்கு உன்னைக் கலியாணம் செய்து கொள்ளப் போகும் இந்த மனிதன் யார் என்பதை நீ அறிந்து கொண்டாயா?" என்றாள் தமயந்தி. மல்லிகாவின் முகம் வெளுத்தது. அங்க ல்லாம் வெடவெடவென்று நடுங்கியது. அவள் பீமராவைப் பார்த்தாள்.

தம : பாவம் உனக்குத் தெரியாது. இவன் பெருத்த சூதாடி; மோசக்காரன்; வஞ்சசன்; துரோகி; திருடன் - என்றாள்.

அதைக் கேட்ட மல்லிகா ஸ்தம்பித்து நின்றாள். பீமராவ் பெரிதும் கோபமடைந்தவனாய்த் துடிதுடித்து நறநறவென்று பல்லைக் கடித்து, அவளைக் கொடூரமாக நோக்கி, "அடி தமயந்தி! இதுவும் நாடகக் கொட்டகை என்று நினைத்துக் கொண்டாயா? உன்னுடைய சாமர்த்தியம் எல்லாம் எங்களுக்குத் தெரியும். நீ இப்போது நடித்தது நிரம்பவும் திருப்தியாயிருக்கிறது. போதும்; உன்னை நான் கலியாணஞ் செய்து கொண்டிருந்தால் யோக்கியன்; நற்குணமுடையவன்; இல்லாவிட்டால் கெட்டவன். அவலை நினைத்து உரலை இடிப்பதைப் போல, நீ எந்த ஆத்திரத்தையோ வைத்துக் கொண்டு இப்படிப் பிதற்றுவது மூடத்தனம். இனி இம்மாதிரி பேசினால் எனக்குக் கோபம் வரும். பிறகு நான் எதைத்தான் செய்வேன் என்று சொல்ல முடியாது.

தம : (ஏளனமாக) சரியான விஷயம். மரியாதைக்குப் பாத்திரமான மனிதனை இவ்வளவு தூஷிக்கலாமா; அதிலும், தகப்பன், தாய் இன்னார் என்பது தெரியாமல் குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்து வளர்க்கப்பட்ட பெரிய மனிதர் நீர்; உம்முடைய அந்தஸ்து யாருக்கு வரும்? அதிருக்கட்டும். உம்மைக் குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்து வளர்த்து எவ்வளவோ அன்போடு காப்பாற்றிய ஸகாராம்ராவைக் கூட ஏமாற்ற உமக்கு உத்தேசம் போலிருக்கிறதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/235&oldid=1234022" இலிருந்து மீள்விக்கப்பட்டது