பக்கம்:வசந்த மல்லிகா.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சகத்தை வென்ற வஞ்சி

223

கொள்ளும். அடி தமயந்தி! நீ தப்பான இடத்தில் உன்னுடைய சாமர்த்தியத்தை உபயோகித்தாய். நாடகத்தில் சூது நகைகளைப் போட்டு அரிதாரத்தை அப்பிக் கொண்டு வந்து குலுக்கி மினுக்கினால் மோகனராவைப் போல இருக்கிற ஆடுதன் ராஜாக்களெல்லாம் வாயைப் பிளந்து உன்னைச் சுற்றிக் கொண்டு அலைவார்கள். அதை விட்டு நீ போலீஸ் உத்தியோகம் செய்ய வந்தாயோ? இனிமேலாவது ஜாக்கரதையாக இரு. பீமராவின் காலை மிதித்தால், அவன் உன்னுடைய தலையை மிதித்து விடுவான் என்பதை இனியாவது மனசில் பத்திரமாக வைத்துக் கொள்; ஆனால் உன் சினேகிதையான மல்லிகாவுக்கு எவ்வளவு பெருத்த ஐசுவரியம் இல்லாமல் போய்விட்டது பார்த்தாயா? நீ பதினைந்து ஜென்மம் எடுத்து கூத்தாடிச் சேர்த்தாலும் அந்த ஐசுவரியத்தை உன்னால் சம்பாதித்து அவளுக்குக் கொடுக்க முடியுமா? இனிமேலாவது மடத்தனத்தை விட்டு விடு - என்று சொல்லியவண்ணம் படியை நோக்கி நடந்தான்.

தம : (ஏளனமாக) ஐயா! பீமராயரவாள். போகுமுன் ஒரு வார்த்தை; இப்படிக் கொஞ்சம் தயவு செய்ய வேண்டும்.

பீம : இன்னம் திருப்தியாகவில்லையா?

தம : நீர் நிரம்பவும் புத்திசாலியாகையால், உம்மை இவ்வளவு சீக்கிரத்தில் அனுப்பிவிட எனக்கு மனம் வரவில்லை ...

மோக : அவன் போகட்டும்; அவனைப் பார்த்தால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறது. கூப்பிட வேண்டாம். ஒழியட்டும் துராத்மா.

தம : மன்னிக்க வேண்டும். இன்னம் ஒரே ஒரு நிமிஷம்; அதற்குப் பிறகு இந்த மேதாவியை அனுப்பி விடுகிறேன். ஐயா பீமராயரவாள்! சற்று முன் என்ன சொன்னீர்? நான் ஏமாறிப் போனதைப் பற்றியல்லவா நீர் தூஷித்தீர்.

பீம : நான் தூஷிக்கவில்லை. உள்ளதைச் சொன்னேன். உங்களுடைய புத்திசாலித்தனத்தை வெளியிட்டேன்; வேறில்லை.

தம : நீர் நேராக தெய்வ லோகத்திலிருந்து குப்பைத் தொட்டியில் இறங்கிய பிரகஸ்பதி என்பது இப்போதுதான் உண்மையில் வெளியாகிறது. உம்முடைய திறமையை இவர்கள் இன்னம் நன்றாக அறிந்து கொள்ளவில்லை. நான் அதை எடுத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/241&oldid=1234031" இலிருந்து மீள்விக்கப்பட்டது