பக்கம்:வசந்த மல்லிகா.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

வஸந்தமல்லிகா

ஸாசனத்தையும் பார்த்து, அவள் சொன்னதையும் கேட்ட பீமராவின் கோபத்திற்கு அளவில்லை. அவன் தமயந்தியை எரித்து விடுபவனைப் போல உருட்டி விழித்து அவளை உற்று நோக்கினான். தான் எத்தனையோ நாட்களாக முயன்று செய்த பிரயத்தனங்கள் யாவும் வீணானதைப் பற்றி நினைக்க, அவனது கண்களில் கண்ணீர் பெருகியது. தனது அழுகையை மெல்ல அடக்கிக் கொண்டு, வெட்கிய முகத்தோடு அவன் வெளியில் நடந்தான். அப்போது தமயந்தி, "அடே பீமா! இனியாவது புத்தியோடு பிழை. மற்றவரை முட்டாள் என்று நினைக்கும் வழக்கத்தை விட்டு விடு; நாம் எவ்வளவோ புத்திசாலியாக இருந்தாலும் நமது தலையில் மிதிக்கக் கூடிய எத்தனையோ மேதைகள் உலகத்தில் இருக்கிறார்கள் என்று நினைத்துப் பணிவாக நடந்து கொள்; அப்போதுதான் நீ முன்னுக்கு வருவாய்" என்று கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/244&oldid=1234034" இலிருந்து மீள்விக்கப்பட்டது