பக்கம்:வசந்த மல்லிகா.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூட்டி வைக்கும் தரகர்

229

மல்லி : எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, அவர் என்ன செய்வார்? அவருக்கு வேறு சொத்து ஒன்றுமில்லையே.

மோ : ஆம்; அதைப்பற்றி உனக்கென்ன கவலை? ஜெமீனுக்கு உண்மையில் உரிமையுடையவள் நீ; எல்லாம் உன்னுடையது. இதுவரையில் அவர் அநுபவித்ததே நியாயமில்லாத விஷயம்; உலகத்தாருடைய கஷ்டங்களை எல்லாம் நாம் கவனிக்க முடியுமா? எல்லாவற்றையும் நீ வைத்துக் கொண்டு இனி சுகமாக அனுபவிக்க வேண்டும்.

மல்லி : சுகமா! அந்தச் சங்கதி எனக்கு இந்த உலகத்தி லேயே கிடையாது - என்றாள்.

அப்போது கிருஷ்ணவேணியும் தமயந்தியும் மேலே வந்தார்கள். உடனே மல்லிகா, "ஆகா! தமயந்திபாயி என் விஷயத்தில் செய்த உதவியை என்னவென்று சொல்லுவேன்! முன் பின் அறியாதவளான என் விஷயத்தில் அவள் இவ்வளவு பாடுபட்டதன் காரணம் என்ன?" என்றாள். அதைக் கேட்ட மோகனராவ், "உன்னை நினைத்துப் பைத்தியங் கொண்டு அலையும் வஸந்தராவிடத்தில் உண்டான பச்சாதாபத்தினால் அவள் இப்படிச் செய்தாள்" என்று சொல்ல நினைத்தார்.

ஆனால், அதைச் சொல்ல அது சரியான சமயமல்ல என்று நினைத்து, "தமயந்தி இயற்கையிலேயே பிறரிடத்தில் அபிமானமும், இளகிய மனமும், பிறருக்கு உதவி செய்யும் குணமும் உடையவள்" என்றார்.

மல்லிகா தமயந்திக்கு அருகில் போய் புன்சிரிப்போடு, "நீங்கள் என் விஷயத்தில் செய்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்!" என்றாள்.

தம : (புன்சிரிப்போடு ) எனக்கு உபசாரம் சொல்ல வேண்டாம். பீமராவின் மேல் எனக்கு ஆத்திரம் இருந்ததல்லவா; அதற்காகப் பழிவாங்க நான் இவ்விதம் செய்தேன். அவனைப் போன்ற துன்மார்க்கனை நான் எங்கும் பார்த்ததில்லை. அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/247&oldid=1234043" இலிருந்து மீள்விக்கப்பட்டது