பக்கம்:வசந்த மல்லிகா.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

வஸந்தமல்லிகா

னியமும், சொந்தமும் எப்படி மாறும்? அப்படி நினைக்காதே! என்று கடிந்துரைத்தாள்.

கிரு : அவசியம் வித்தியாசம் ஏற்படும். நாங்கள் சாதாரண மான ஸ்திதியில் இருக்கும் ஏழைகள்தானே; நீ பெருத்த சீமாட்டி! ராஜ வம்சத்தைச் சேர்ந்தவள்.

மல்லி : அப்படி நினைக்காதே! நானும் உன்னோடு ஊர்வசி வேஷம் போட்டுக் கொண்டு ஆடிய ஸஞ்சலாக்ஷி என்றே நீ என்னை எப்போதும் நினைத்துக் கொள். அற்பப் பணம் வந்து விட்டதனாலேயே நண்பரை மறந்து விடக் கூடிய கேவல புத்தியையுடைய மனுஷி என்றா என்னை நினைக்கிறாய்? இத்தனை நாட்கள் என்னோடு பழகியும் என்னுடைய குணத்தை நீ அறிந்து கொள்ளவில்லையே! - என்று கொடுமையாகப் பேசினாள்.

அதைக் கேட்ட கிருஷ்ணவேணி அவளை ஆசையோடு கட்டிக்கொண்டு, "கோபித்துக் கொள்ளாதே! நான் உன்மேல் சந்தேகப்பட்டது தவறு. மன்னித்துக் கொள். சகோதரியைப் போல வித்தியாசம் இல்லாமல் ஒன்றாயிருந்த நீ பிரிந்து போய் விடுவாயோ என்ற என்னுடைய மனம் கொதித்தது. அதனால் பலவிதமாகப் பேசி விட்டேன். இப்போது உன்னுடைய மனசை அறந்தேன். விசனப்படாதே! இனிமேல் இப்படிச் சொல்லவே மாட்டேன்" என்று தேற்றினாள்.

* * *

தஞ்சையில் தமது மாளிகையில் வந்திறங்கிய வஸந்தராவ் ஏக்கங் கொண்டவராய் மறுநாட் காலையில் தனியாக நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். தான் இனி தஞ்சைக்கே வருவதில்லை என்று உறுதி செய்து கொண்டு போன தம்மை தமயந்தி வற்புறுத்தி திரும்பவும் தஞ்சைக்கு அழைத்து வந்ததன் காரணத்தை அறிய அவர் நிரம்பவும் ஆவல் கொண்டு உட்கார்ந்திருந்தார். தமது உயிரை இரண்டு முறை காப்பாற்றிய நற்குணவதியான தமயந்திக்கு மனவருத்தம் உண்டாகக் கூடாதென்று அவர் தஞ்சைக்கு வந்தாரேயன்றி வேறு எக்காரணம் பற்றியும் வந்த வரன்று. தமது உயிரை வாங்க நினைத்த மோகனராவும், அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/250&oldid=1234046" இலிருந்து மீள்விக்கப்பட்டது