பக்கம்:வசந்த மல்லிகா.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சக்கிலியர் சாமிக்கு செருப்புப் பூசை

247

அந்தச் சமயத்தில் தமயந்தியும், அவளுக்குப் பிறகு ஸகாராம் ராவும் உள்ளே நுழைந்தனர்.

தம : (தமயந்தி அவர்களை அருவருப்போடு பார்த்து) ஐயா! துக்கோஜிராவே! அடீ அருமைப் பெண்களா! இந்த அபூர்வமான வேடிக்கையை நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். நீங்கள் நிரம்பவும் அன்போடு பாதுகாத்து வளர்த்த அநாதையான அந்தப் பெண்ணே இந்த ஜெமீனுக்கு இப்போது எஜமானியாக வரப் போகிறாள் என்று நீங்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டீர்கள் - என்றாள்.

துக்கோ : (அதைக் கேட்டு) என்ன ஆச்சரியம்! இவளா ஜெமீனுக்கு சொந்தக்காரி? - என்று திகைப்பும் வியப்பும் அடைந்து வாயைப் பிளந்தான்.

கமலா : இவளா ஸஞ்சலாக்ஷி!

ஸீதா : மல்லிகாவா ஸஞ்சலாக்ஷி!

தம : ஆம்; இவளே பழைய ஜெமீந்தாரின் பேர்த்தி! இந்த சமஸ்தானத்துக்கும் எங்களுக்கும் இந்த ஊராருக்கும் இனி இவளே எஜமானி! சாஸனம் அகப்பட்டு, இவளே இதன் சொந்தக்காரி என்பதும் ருஜுவாய்விட்டது - என்றாள்.

அதைக்கேட்ட துக்கோஜிராவ் முதலிய மூவரும் திகைத்து, ஆத்திரமும் அவமானமும் அடைந்து, செய்வதின்னது என்பதை அறியாமல் பல்லிளித்து நின்றனர். அப்படி இரண்டொரு நிமிஷம் சென்ற பின் துக்கோஜிராவ் மெதுவாக, "இதென்னவோ சூதாகத் தான் இருக்கிறது. எனக்கு ஒன்றும் நம்பிக்கைப் படவில்லை " என்றான்.

தம : நீர் சொன்னது சரியான வார்த்தை; உண்மையான சிநேகிதர் யார் என்பதையும் பகட்டான சிநேகிதர் யார் என்பதையும் பரீட்சித்துப் பார்க்கும் பொருட்டு செய்யப்பட்ட சூதுதான் இது. இந்த சூதைப் பற்றிய விவரங்களை நீர் நன்றாக அறிந்துகொள்ள வேண்டுமானால், இதோ நிற்கிற ஸகாராம்ராவ் தெரிவிப்பார். உங்களை இந்தப் பங்களாவின் வாசலில் உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/265&oldid=1234111" இலிருந்து மீள்விக்கப்பட்டது