பக்கம்:வசந்த மல்லிகா.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30-வது அதிகாரம்

இறந்தவர் பிழைத்தது எங்ஙனம் சொல்வது!

கிருஷ்ணவேணிக்கு அன்றைய பகற் பொழுது கால் நாழிகையைப் போலக் கழிந்து விட்டதாயினும் மல்லிகாவிற்கு அது ஒரு யுகம் போல இருந்தது; தமயந்தியோ தான் துக்கோஜி ராவ் முதலியோரை அவமானப்படுத்தியதைப் பற்றி பெரிதும் குதூகலமடைந்தவளாய் மிகுதியிருந்த நாடகக் காட்சியையும் விரைவில் நடித்து விட வேண்டும் என்னும் ஆவலோடிருந்தாள்.

அன்றைய மாலையில் தஞ்சையில் இருந்து வந்த ஒரு பெட்டி வண்டி அந்த மாளிகையின் வாசலில் நின்றது. அதில் வஸந்தராவும், மோகனராவும் கீழே இறங்கி மாளிகைக்குள் நுழைந்தார்கள்.

மோக : (புன்சிரிப்போடு) தாங்கள் இவ்வளவு பெருத்த ஐசுவரியத்தை எல்லாம் கொடுத்து விடப் போகிறவரைப் போலவே காணப்படவில்லையே! கலியாண மாப்பிள்ளையைப் போல நிரம்பவும் சந்தோஷமாக இருக்கிறீர்களே!

வஸ : என்னுடையது அல்லாத பொருளை நான் எதற்காக அநாவசியமாக வைத்திருக்கிறது? ஐசுவரியம் வந்ததனால் எனக்கு ஏதாவது சந்தோஷம் இருந்தால் அல்லவா, அது போவதைப் பற்றி கவலை உண்டாகும். எனக்கு இனி தெய்வ லோகத்திலிருந்து சங்கநிதி பதுமநிதி இரண்டுமே கிடைப்பதனாலும் சந்தோஷம் உண்டாகப் போகிறதில்லை. என்னுடைய கதையைத் தான் நான் முன்னமேயே தெரிவித்திருக்கிறேனே! எப்போது நான் என்னுடைய பிராண சுந்தரியை இழந்தேனோ, அப்போதே இந்த உலகம் என்னுடைய கண்ணுக்குப் பாழாய்ப் போய் விட்டது. எங்கே பார்த்தாலும் அந்தப் பெண்மணியின் உருவமே மயமாகக் காணப்படுகிறது. இந்தச் சமுத்திரக் கரையும், பூஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/267&oldid=1234377" இலிருந்து மீள்விக்கப்பட்டது