பக்கம்:வசந்த மல்லிகா.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

வஸந்தமல்லிகா

உட்கார்ந்து தோட்டத்தைப் பார்த்தவண்ணமிருந்தார். தமது கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடிக் கொண்டிருந்ததை அவர் கவனிக்கவே இல்லை.

அவ்வாறு அரை நாழிகை கழிய, அவருக்கு நேராக, சற்று தூரத்தில், ஒரு மங்கையின் வடிவம் ஸஞ்சாரம் செய்ததாக அவரது மனதில் பட்டது. அது மல்லிகாவின் வடிவத்தைப் போலவே இருந்தது. உயரம், சாயல், நிறம், யௌவனப் பருவம், தளர்ந்த நடை முதலிய யாவும் அவளுடையவை போலவேயிருந்தன. அது மானசீகமான பொய்த்தோற்றம் என்று நினைத்த வஸந்தராவ் அதை அலட்சியமாக நோக்கியவண்ணம் இருந்தார். ஆனால், அவரது ஹிருதயம் மாத்திரம் படபடவென்று அடித்துக் கொண்டது. அதை உற்று நோக்கியதில், அவரது மூச்சு நீண்ட நேரத்திற் கொருமுறை வெளிவந்தது. அந்த வடிவம் படித்துறையை நோக்கி மெல்ல நடந்து வந்ததாகக் காணப்பட்டது. அவ்வாறு, அது அருகில் நெருங்க நெருங்க, அவரது வியப்பும் ஆற்றலும் மலைபோலப் பெருகின. அந்த வடிவம் கடைசியாக படித் துறைக்கு இரண்டு மூன்று கஜ தூரத்தில் நின்று கீழே குனிந்து ஒரு ரோஜா மலரைப் பறித்து நாசியில் மோந்ததாகத் தெரிந்தது. அதுகாறும் மறைவிலிருந்த வஸந்தராவ் எழுந்து திடீரென்று பாய்ந்து போய், "அடீ என் உயிர் நிலையே! என் மல்லிகா! என் பாக்கியமே!" என்று அவளை வாரியெடுத்து இறுக அணைத்துக் கொண்டார். அவள் திடுக்கிட்டு அஞ்சி வீரிட்ட சப்தம் செய்து தனது கையிலிருந்த புஷ்பத்தை கீழே போட்டு விட்டு தனது இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டாள். முதலில் யாரோ அன்னியன் தன் மீது பாய்ந்து தன்னைத் தூக்கினான் என்பதை மாத்திரம் அறிந்தாள் அன்றி, அது வஸந்தராவ் என்பதை அறியவில்லை. அவள் மேன்மேலும் கூச்சலிட நினைத்தாள். அதற்குள் அவரது குரல் அவளது மனதில் சந்தேகத்தை உண்டுபண்ணவே, அவள் கூச்சலிடாமல் தனது கண்ணை மெதுவாகத் திறந்து பார்த்தாள். உடனே அவளது முகம் மாறுபட்டது. தேகம் காற்றில் சையும் மாந்தளிரைப் போல ஆடியது. அவர் அதை மல்லிகாவின் பொய்த் தோற்றம் என்றே அப்போதும் நினைத்தாராயினும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/270&oldid=1234402" இலிருந்து மீள்விக்கப்பட்டது