பக்கம்:வசந்த மல்லிகா.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறந்தவர் பிழைத்தது எங்ஙனம் சொல்வது!

255

மனுஷியைப்போல் ஒரு மாதிரியாகப் பேசுகிறாய்? நான் உனக்கு என்ன வஞ்சகம் செய்தேன்?

மல்லி : (ஆத்திரமாக) ஓகோ! செய்ய நினைத்ததை இதற்குள் மறந்து விட்டீர்களா? நீங்கள் மறந்தாலும் நான் ஒரு நாளும் மறப்பேனென்று நினைக்க வேண்டாம். தாங்கள் செய்த வஞ்சகத்துக்குப் பதில் பழிவாங்க நான் ஒரு காரியம் செய்ய உத்தேசிக்கிறேன். இந்தப் பத்திரத்தின்படி தங்களுடைய ஐசுவரியம் எல்லாம் என்னைச் சேர வேண்டும். என் விஷயத்தில் மோசம் செய்ய நினைத்த மனிதரிடத்திலிருந்து ஒரு துரும்பைக் கூட வாங்கிக் கொள்ள எனக்குப் பிரியமில்லை. இதோ சாஸனம் இருக்கிறது. இதையும், ஐசுவரியம் யாவற்றையும் தாங்களே எடுத்துக் கொள்ளலாம். எனக்கு ஒன்றும் தேவையில்லை. இந்த ஜெமீனுக்கு சொந்தமான ஒரு செப்புக் காசைத் தொட்டாலும் அது என் கையையும் மனசையும் கொளுத்தி விடும்; நம்பிக்கை துரோகம் செய்த மனிதருடைய கைப்பட்ட சொத்தைக் கையால் தொடுவதும் பெருத்த பாவம்; தவிர, அதைக் கொடுத்தவருடைய நினைவும் அடிக்கடி வந்து வருத்துமாதலால், எனக்கு ஒன்றும் தேவையில்லை - என்று சாஸனத்தை எடுத்துக் கீழே எறிந்தாள். வஸந்தராவ் திகைத்து, "கண்மணி! மல்லிகா! என்னை ஏன் இப்படித் தூஷிக்கிறாய்? ஒரு புருஷன், ஸ்திரீயை எவ்வளவு அதிகமாகக் காதலிக்கக் கூடுமோ அதைக் காட்டிலும் விசேஷமாக நான் உன்மேல் பிரேமை கொண்டிருக்கிறேன்; சதாகாலமும் என் இருதயத்தில் உன்னை வைத்துப் பூஜித்து வருகிறேன்; நீ இல்லாமல் இந்த உலகமே எனக்குப் பாழாய்விட்டது. என்னுடைய உயிரைக் காட்டிலும் நீயே எனக்கு விசேஷமென்று மதிக்கிறேன். அப்படி யிருக்க, என்னை நீ இவ்விதம் இகழ்வது தருமமல்ல" என்றார்.

மல்லி : ஓகோ! நான் சொல்வதா தருமமல்ல? நல்ல வேளையாக, சமயத்தில் தங்களுடைய மோசக் கருத்தையும் வஞ்சக குணத்தையும் ஒருவர் வெளியிட்டபடியால் தப்பினேன். இல்லா விட்டால், என் கதி என்ன ஆயிருக்குமோ! என்னை வஞ்சிக்க எண்ணவில்லை என்று நீங்கள் சுவாமி சாட்சியாக மறுக்க முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/273&oldid=1234414" இலிருந்து மீள்விக்கப்பட்டது