பக்கம்:வசந்த மல்லிகா.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

வஸந்தமல்லிகா

தார். அதன் பிறகு அவ்விரு காதலரும் நெடுநேரம் வரையில் பற்பல விஷயங்களைப் பற்றிப் பேசி, பேராநந்தத்தில் மூழ்கி இருந்தனர்.

* * *

இரவு எட்டு மணி நேரமாயிற்று. அவர்கள் மாளிகைக்குத் திரும்பி வராததைக் கண்டு பலவாறு சந்தேகித்த தமயந்தி, கிருஷ்ணவேணி, மோகனராவ் ஆகிய மூவரும் அவர்களைத் தேடிக்கொண்டு வந்து படித்துறையில் அவர்களைக் கண்டு அவர்கள் இருவரும் இன்பசாகரத்தில் மூழ்கியிருந்ததை உணர்ந்து பெருமகிழ்ச்சி அடைந்தனர். மோகனராவ் அப்போது புன்சிரிப்போடு, "பிரிய மித்ரரே! உங்களிருவருக்கும் உண்டான துன்பங்களுக்கெல்லாம் நானே காரணமானவன். கோனூர் மிட்டாதாருக்கும் தங்களுக்கும் விரோதம் என்பதை அறியாமல், நான் அவருடைய சொல்லை நம்பினேன். அதனால் ஏமாறிப் போய், தங்களைப் பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டேன்; மல்லிகாவின் புத்தியைக் கலைத்து, சத்திரத்திலிருந்து அவளைப் போகச் செய்தேன். அதனால் தங்கள் இருவருக்கும் பெருத்த துயரத்தையும் துன்பங்களையும் உண்டாக்கி மகத்தான பாவ மூட்டையைக் கட்டிக்கொண்டேன்; நான் அறியாமல் செய்த குற்றத்தை நீங்கள் இருவரும் பெரிய மனசோடு மன்னிக்க வேண்டுகிறேன். அவைகளுக்குப் பரிகாரமாக உங்கள் இருவரையும் திரும்பவும் இப்போது சேர்த்து வைத்து விட்டோம் - என்று உள்ளம் உருக வணக்கமாகக் கூறினார்.

அதைக் கேட்ட வஸந்தராவின் மனமும் கண்களும் கலங்கின. அவர் மோகனராவை நோக்கி, "எல்லாம் சர்வேஸ்வரனுடைய விளையாட்டல்லவா! மனிதர் செய்யும் காரியமா! இரவுக்குப் பின் பகல் வருவது எவ்வளவு நிச்சயமோ, அப்படியே துன்பத் துக்குப் பிறகு இன்பம் வருவது நிச்சயமல்லவா?" என்றார்.

அப்போது மல்லிகா, "துன்பத்திற்குப் பிறகு இன்பம் வந்தால் தான் இன்பத்தின் அருமையும், ருசியும் அதிகரித்துத் தோன்றும். எங்களுடைய ஆபத்துக் காலத்தில் எங்களைக் காப்பாற்றி கடைசி வரையில் உதவி செய்து இவ்வித மேன்மையை அளித்த பரம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/276&oldid=1234417" இலிருந்து மீள்விக்கப்பட்டது