பக்கம்:வசந்த மல்லிகா.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறந்தவர் பிழைத்தது எங்ஙனம் சொல்வது!

261

காலத்தில் நாம் புறப்பட வேண்டும். நம்மிடம் அவர்கள் வைத்திருக்கும் அன்புக்கு நாம் வேறு எதைத்தான் செய்யப்போகிறோம்?

வஸ : உண்மையான நண்பர்கள் என்பது அவர்களுக்கே தகும். நற்குணமுள்ளவனுக்கு ஜெகதீசன் எப்போதும் உதவியே செய்வான் அன்றி, அவர்களுக்கு ஒரு குறைவையும் வைக்க மாட்டான். கண்மணி! இப்படி வா! இப்படி வா! அதோ ஒரு பெருத்த அலை வருகிறது. இப்படி ஓடிவந்துவிடு! உன் மேல் மோதிவிடும் - என்று சொல்லிக் கொண்டே ஓடிப்போய் அவளை அழைத்துத் தூக்கி இப்பால் கொணர்ந்து, நாற்புறங்களிலும் திரும்பிப் பார்த்து, தங்களை யாராகிலும் கவனிக்கிறார்களா என்பதை ஆராய்ந்துணர அவளது முகத்தில் திருட்டுத்தனமாக ஒரு முத்தமிட்டு அவளைக் கீழே விடுத்தார்.

சுபம்! சுபம்!! சுபம்!!!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/279&oldid=1234421" இலிருந்து மீள்விக்கப்பட்டது