பக்கம்:வசந்த மல்லிகா.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

263

சகவாஸ தோஷத்தினாலும் ஏற்படக்கூடிய கேடுகள் இன்னவை என்பதையும், ஸத்சங்கத்தால் எவ்விதம் சரீரத்தில் வெகு சுலபமாக ஊறிப்போயுள்ள கெட்ட வழக்கங்களையும் சுலபமாக விட்டு விடக்கூடியது சாத்தியம் என்பதையும், மனிதருடைய புக்தி யுக்தியால் எத்துணை விஷயங்களையும் எவ்விதம் சுலபமாகக் கண்டுபிடித்துவிடக்கூடும் என்பதையும் நூலாசிரியர் வெகு அழகாயும், தெள்ளிய நடையிலும், படிக்கப்படிக்க இன்பத்தைக் கொடுக்கக்கூடிய விதமாகவும் வர்ணித்திருக்கிறார். முன்னர் இந்நூலாசிரியர் வெளியிட்டுள்ள திகம்பரசாமியார் என்ற கதையின் தொடர்ச்சியாக இக்கதை இருக்கிறது. அந்தக் கதையில் கண்ணப்பாவும், வடிவாம்பாளும், திகம்பரசாமியாரும் முக்கிய பாத்திரங்களாக விளங்கியது போல் இதில் கண்ணப்பாவின் சகோதரரான கந்தசாமியும், முடிவில் அவருடைய மனைவியான மனோன்மணியும், திகம்பர சாமியாரும் முக்கிய நடிகர்களாக இருக்கின்றனர். கல்வியறிவில் கரை கடந்து மேனாட்டுப் பழக்க வழக்கங்களிலும் சம்பிரதாயங்களிலும் முழுகி, நமது புராதன தர்மங்களில் மிகுந்த வெறுப்படைந்திருந்த கதாநாயகியை கந்தசாமிக்கு மணமுடிக்க உபயகுலப் பெற்றோர்களும் தீர்மானம் செய்திருந்தும், பூர்வீக தர்மங்களில் கண்ணுங்கருத்தும் உடையவனாயினும் தான் மணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணை நேரில் கண்டு அவளுடைய குணாதிசயங்களை அறிந்து வர விரும்பிய கந்தசாமி தனது நண்பரொருவருடன் அவருடைய மனைவி போல் வேடம் பூண்டு பெண்ணைப் பார்க்கச் செல்வதும், கந்தசாமியின் பெற்றோருடைய குடும்பத்தாரில் தீரா வைரம் வைத்திருந்த சிலர் தங்களுடைய க்ஷத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளக் கருதி மணமகளைக் களவாட வருவதும், பெண்ணைப் பார்க்க வந்தவர்கள் சொல்லியபடி மணமகனின் பிதா உணர்ந்ததும், அவர்களை அவர்கள் அறியாமல் சிறை வைப்பதும், மண மகளைக் களவாட வந்தவர்கள் பெண் வேஷத்துடன் வந்திருந்த கந்தசாமியைக் களவாடிச் செல்லுவதும், அவனை சட்டநாத பிள்ளையின் சகோதரன், புருஷன் என்பதை அறியாமல் விவாகம் செய்து கொள்ளுவதும், அவனிடமிருந்து கந்தசாமி சாமர்த்தியமாக வெளிப்படுவதும், திகம்பரசாமியாருக்கு அவருடைய விரோதிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/281&oldid=1234423" இலிருந்து மீள்விக்கப்பட்டது