பக்கம்:வசந்த மல்லிகா.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

வஸந்தமல்லிகா


செய்யுங் கேடுகளும், அவைகளிலிருந்து அவர் தப்பி சமயத்திற்குத் தகுந்த வேடந்தரித்து தமது நண்பர்களுக்கு உதவி செய்து வருவதும், காணாமற்போன கந்தசாமி திரும்பிவர வேண்டும் என்று அவனுடைய பெற்றோரும், உற்றாரும், தெய்வப்பிரார்த்தனை நடத்துவதும், அதுகாலை கந்தசாமியின் தகப்பனார் தெய்வத்தை தொழுத பாடல்களின் உருக்கமான தன்மையையும் அவைகளின் உட்கருத்தையும் உணர்ந்த மனோன்மணி தனது புத்தியை மாற்றிக் கொண்டு உத்தமப் பெண்மணியாக மாறிவிடுவதும், முடிவில் கந்தசாமி க்ஷேமமாகத் திரும்பி வந்தபிறகு இருவருக்கும் சுப முகூர்த்தத்தில் விவாகம் நடைபெறுவதும் இந்த நாவலில் விவரிக் கப்பட்டிருக்கிறது. படிப்பவருடைய மனதில் நல்லெண்ணங்களும், தெய்வ பக்தியும் சுதாவாகவே எழுந்து நவீன நாகரிகத்தில் வெறுப்பு ஏற்படக்கூடிய விதமாக இது எழுதப்பட்டிருக்கிறது. இத்துணை உயரிய நாவல்களை எழுதித் தமிழ் உலகிற்கு உதவி வரும் இந்நூலாசிரியருக்குத் தமிழ் மக்கள் தங்கள் பூர்ண ஆதரவைத் தந்து மேன்மேலும் இத்துறையில் ஈடுபட அவருக்கு ஊக்கத்தைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/282&oldid=1234424" இலிருந்து மீள்விக்கப்பட்டது