பக்கம்:வசந்த மல்லிகா.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வேடன்வலைப் பேடன்னம்

15

கொண்டு, விடுபடும் வழியறியாமல் துன்புறுவதை நினைத்துக் கலங்கினாள்; தனது ஆயுட்காலம் முழுதையும் அவ்வாறு தான் எப்படிக் கழித்தல் கூடும் என்று அஞ்சி பொறுக்கலாற்றாத துயர்க் கடலில் மூழ்கினாள்; அவர்கள் தன்னையும் தனது அழகையும்பற்றி இகழ்ந்து தூஷணை செய்ததை நினைத்து நினைத்து உருகினாள்; அவ்வாறு பற்பல நினைவினால் மெய்ம்மறந்தவளாய் பங்களாவின் தோட்டத்திற்குள் நுழைந்து அதன் பின்புறத்திற்கு வந்தாள்; ஒரு நாழிகை நேரமாக அவ்வாறு மெதுவாய் உலாவி நடந்து வந்தாளாதலால், கீழே சிறிது உட்கார வேண்டுமென்னும் ஆசை அவளுக்கு உண்டாயிற்று. அவள் பங்களாவின் பின்புறத்திலிருந்து தோட்டத்திலிறங்கும் படிகளின் மீதேறி, முதற்படியின் மேல் உட்கார்ந்து, ஆகாயத்தில் களங்கமற்றுத் தோன்றிய குளிர் மதியை நோக்கிப் பரவசமடைந்தாள். முறையே, நீர்ப்பரப்பையும் ஆகாய விரிவையும் நோக்கி நோக்கிக் கடவுளது படைப்பின் இயற்கையழகில் ஈடுபட்டுக் கல்லாய்ச் சமைந்திருந்தாள்.

அவ்வாறு அரைநாழிகை வரையில் ஏகாந்தமாயிருந்து தனது நெஞ்சோடு சம்பாஷணை புரிந்திருந்தவள். ஏதோ, ஒசையுண்டானதைக் கேட்டு திடுக்கிட்டு மானைப்போல மருண்டு நாற் புறத்திலும் திரும்பித் திரும்பிப் பார்த்தாள்; ஒருநாளுமில்லாமல் அன்றுண்டான அரவத்தின் காரணமென்னவோவென்று திகைத்தாள். அப்போது அவளது மனதில் ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது. புதிய ஜெமீந்தார் அந்த மாளிகைக்கு வந்திருப்பதாக துக்கோஜிராவ் தெரிவித்ததை முற்றிலும் மறந்து தான் அங்கு வந்ததை நினைத்து அவள் வருந்தித் தனது மூடமதியை இகழ்ந்து தன்னைக் கடிந்து கொண்டாள். உடனே எழுந்து நாற்புறங்களையும் பார்த்தவண்ணம் வேகமாய்ப் படியை விட்டிறங்கத் தொடங்கினாள். அந்தச் சமயத்தில் பங்களாவின் வலது பக்கத்திலிருந்து இரண்டு மனிதர் சம்பாவித்தவண்ணம், அவளிருந்த படியை நோக்கி வந்ததை அறிந்தாள்; அவர்களில் ஒருவர் 20, 25வயது நிறையப் பெற்ற யெளவனப் புருஷராயும், மற்றவர் சுமார் 60 வயதடைந்த முதியவராயும் காணப்பட்டனர். சிறியவர் மிக்க அழகிய சரீரமுடையவராயும் கம்பீரத் தோற்றத்தைப் பெற்றவ ராயுமிருந்தார். புதிய ஜெமீந்தார் பாலியரென்று துக்கோஜிராவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/33&oldid=1229176" இலிருந்து மீள்விக்கப்பட்டது