பக்கம்:வசந்த மல்லிகா.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

வஸந்தமல்லிகா

தில் அவரை முழுதும் நம்பி, இவ்வளவு பெருத்த காரியத்தைச் செய்யலாமா? இதை நினைப்பதே பயமாக இருக்கிறதே!" என்றார் மோகனராவ்.

அதைக்கேட்ட மல்லிகா, தனது காதலரை தூஷித்துப் பேசிய மோகனராவின்மேல் சிறிது கோபங்கொண்டவளாய், "நீங்கள் சொல்வது எனக்கு நன்றாக விளங்கவில்லையே! அவரை நம்பினால் கெடுதல் என்ன?" என்றாள்.

"நான் இதற்குமேல் அதிக விரிவாகப் பேசினால், உன் மனசு புண்படுமென்பது நிச்சயம். நான் குறிப்பாகச் சொல்வதை அறிந்து கொள்ள உன்னால் கூடவில்லையா? அவருடைய சொல்லை நம்பி நீ வீட்டை விட்டு ரகஸியமாக அவருடன் ஓடி வந்து விட்டாயே! அது எவ்வளவு அவமானமான காரியம் தெரியுமா? வெளியில் தெரிந்தால் எவ்வளவு வெட்கக்கேடு! இப்போது அவர் உன்னைக் கலியாணம் செய்து கொள்ளா விட்டால், நீ உன்னுடைய வீட்டுக்குத் திரும்பவும் போக முடியுமா? உன்னுடைய கற்புக்கு இன்னமும் பங்கம் ஏற்படாதிருந்தாலும், நீ யாதொரு தவறையும் செய்யாதிருந்தாலும், நீ இனி வீட்டுக்குப் போக முடியாதல்லவா?" என்றார். அதைக் கேட்ட மல்லிகாவின் முகம் வெட்கத்தினால் கறுத்தது; கீழே குனிந்து கொண்டவளாய் கோபச் சிரிப்புடன், "அவர்கள் கலியானத்துக்கு முகூர்த்தம் நிச்சயிக்கப் போயிருக்கிறார்கள். ஆகையால், அதைப்பற்றி சந்தேகமே இல்லை" என்றாள்.

"அவர் நிச்சயமாக அப்படியே செய்வாரென்பது உனக்கு எப்படித் தெரியும்?" என்றார்.

"அவர்களே உறுதிசொல்லி இருக்கிறார்கள்" என்று அலட்சியமாகத் தெரிவித்தாள்.

"அவர் சொன்ன சொல் தவறாதவரென்பதை நீ நிச்சயப்படுத்திக் கொண்டாயா?” என்றார்.

"என் விஷயத்தில் அவர்கள் ஒரு நாளும் வஞ்சம் நினைக்க மாட்டார்கள். உயிர் போவதானாலும் என்னிடம் பொய் சொல்ல மாட்டார்கள்" என்றாள்.

"பாவம்! நீ கபடத்தையே அறியாதவள்! அவருடைய சங்கதி உனக்கெப்படித் தெரியப்போகிறது. அவருக்கு இதே தொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/90&oldid=1231231" இலிருந்து மீள்விக்கப்பட்டது