பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. வேங்கடம் - மாலவனுக்கா? வேலவனுக்கா?" "திருவேங்கடம் திருமாலுக்கு உரியதன்று; அது முருக னுக்கே உரியது. வைணவர்கள் முருகன் உருவத்தையே மாற்றித் திருமால் உருவமாகச் செய்துவிட்டார்கள்’ என்று கற்றோர்களிடையே ஒரு பேச்சு நிலவி வருகின்றது. இக்கருத்தினைப் பேராசிரியர் மு. இராகவய்யங்கார் அவர் கள் மறுத்து பல்லாண்டுகட்கு முன்னர் ஒர் ஆய்வுக் கட்டுரை வரைந்துள்ளார். அஃது இன்னும் கற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்று கருத வேண்டியுள்ளது. அதுபற்றிய கருத்துகளை மீண்டும் அறிஞர்கள் முன் வைக்கின்றேன். ஆய்வுக்குரிய செய்திகள்: 1. இன்னின்ன நிலம் இன்னின்ன தெய்வத்திற்கு உரியதென்று பாகுபடுத்தி நூற்பா செய்யுமிடத்தில் தொல்காப்பியர் திருமாலுக்கு முல்லை நிலமாகிய காட்டையும், முருகனுக்கு குறிஞ்சி நிலமாகிய மலையையும் உரிமையாக்குவதால், மலைநில மாகிய வேங்கடம் முருகனுக்கு உரியதேயன்றித் திருமாலுக்கு உரியதாகாது என்பது.

  • சப்தகிரி (அக்டோபர்-1987)யில் வெளிவந்தது. 1. தொல். பொருள். அகத்திணை.-5.