* * முலலாழ்வார்கள் காட்டும் திருமலைக் காட்சிகள் f{} : என்று திருப்பிரிதித் திருமொழியில் மேகத்தை யானை مہدا யோடு ஒப்பிட்டுப் பேசுவர். திருமலை “, e. ல் ஆண் யானை யொன்று கரிய மலை முகட்டில் படிந்திருந்த முகிற்பட லத்தை எதிரியான ஒரு யானையென்று மயங்கிப் பெரிய வேகத்துடன் சென்று துதிக்கையால் குத்துகின்றது. இத னைக் கண்ட யாளியொன்று இக் களிற்றுக்கு இவ்வளவு மதமா?' என்று சினத்து ஓடிவந்து அந்த யானையின்மீது பாய்ந்து ஓங்கி அறைந்து அதன் கொம்புகளை முறிக்கின் றது. யானையும் வாய்விட்டுப் பிளிறிக் கொண்டு மடிந் தொழிகின்றது. ஆயினும், அது சினந்தனியாமல் அங் கேயே நின்ற வண்ணம் பெரு முழக்கம் செய்து மல்ை யையே அதிரவைக்கின்றது. இப்படி ஒரு காட்சி. களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி ஒளிறு மருப்பொசிகை யாளி-பிளிறி விழகொன்று நின்றதிரும் வேங்கடமே! மேனாள் குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று -மூன். திருவந் 71 களிறு-ஆண் யானை: முகில்-மேகம் ఫ్గన్స్డ* து-ஆ - క్రి - * * * துதிக்கை:ஒளிறு-விளங்குகின்ற; ஒசி-முறிக்கின்ற; குழகன்று.இளங்கன்று (வத்சலாசுரன், ! என்பது ஆழ்வார் காட்டும் சொல்லோவியம். பிறிதொரு காட்சி: திருவேங்கட மலையில் களி றொன்று தன் பிடியுடன் கலந்திருக்கும்பொழுது ஊடல் நிகழ்கின்றது. உடனே அது தன் பேடையை விட்டுப் பிரிந்து இங்குமங்கும் திரிகின்றது. தன் சினத்திற்குப் போக்குவீடாகத் தன் கொம்பினை மணிப்பாறைகளில் குத்துகின்றது. அப்பொழுது அதன் கொம்பினின்றும் முத்துகள் உதிர்கின்றன.
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/137
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
