பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பக்திசாரர் கருத்தில் திருவேங்கடம் ஒரு சமயம் அத்திரி வசிட்டர், பிருகு பார்க்கவர், புலத்தியர், அங்கிரசு முதலான பிரம்ம இருடிகள் பலரும் சத்தியலோகம் சென்று நான்முகனைத் திருவடி தொழுது கூப்பிய கையராய்' நாங்கள் பூலோகத்தில் தவம் இயற்றக் கருதுகின்றோம். சிறந்த இடத்தை உறுதி செய்து சொல்ல. வேண்டும்” என்று வேண்டினர். நான்முகனும் தேவ சிற்பியான விசுவகர்மாவை வரவழைத்து இம் முனிவர்கள் காணுமாறு துலாக்கோல் நாட்டி ஒரு தட்டில் பூமியை யும், மற்றொரு தட்டில் திருமழிசை என்னும் ஊரையும் வைத்து நிறுக்கச் செய்தார். தேவ தச்சன் அங்ங்ணமே செய்தான். பூமி வைக்கப்பட்ட தட்டு இலேசுபட்டு மேலோங்கி நின்றது. திருமழிசை வைக்கப்பெற்ற தட்டு கனம் பெற்றுத் தாழ்ந்து நின்றது. இவ்வேறுபாட்டை நான்முகன் அம்முனிவர்கட்குக் காட்டித் திருமழிசைக்கு 'மஹீலார் கேrத்திரம்' என்ற காரணப் பெயரிட்டு அவண் சென்று தவம் இயற்ற அநுமதி வழங்கி அவர்களை அனுப் 1. திருமழிசை இந்தத் திருத்தலம் சென்னை திருவள்ளுர் (திருஎவ்வுளுர் என்ற பேருந்து வழி யில் பூவிருந்த வல்லியைத் தாண்டி சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.