பக்திசாரர் கருத்தில் திருவேங்கடப் * 15 நேரங்களிலெல்லாம் தவறாமல் குடை, சாமரம் முதலிய வழிபடுவதற்குரிய உபகரணங்களுடன் வந்து வழிபட்டுப் ப்ோவர் (43). ஆகவே அன்பர்க்ளை சேணுயர் வேங்க டத்தை- மல்குதோய் சென்னி வடவேங்கடத்தானைசென்று வணங்குமாறு பணிக்கின்றார் ஆழ்வார், சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை நின்று வினைகெடுக்கும் நீர்மையால் (42) என்பது ஆழ்வாரின் திருவாக்கு. பாவங்களைப் போக்கு வதே திருமலையின் இயல்பு,வேம்-பாவம், கடம்-எரித்தல். வேங்கடம் என்றசொல்லின் பொருள் தன்னை அடைந்த வர்களின் பாவமனைத்தையும் ஒழிப்பது என்பதாகும். ஆற்றுப் படுத்தல்: ஒரு பாசுரத்தில் கிளரொளி இளமை கெடுவதற்குமுன் திருமலை செனறு திருமலையப் பனைச் சேவிக்குமாறு பணிக்கின்றார். ஒரு சமயம் இரா வணன் தனது பத்துத் தலைகளையும் மறைத்துக்கொண்டு நான்முகனிடம் சென்று வரம் வேண்டுகின்றான். எம் பெருமான் ஒரு சிறு குழந்தை வடிவாய் நான்முகனுடைய மடியில் உறங்குவான் போல் கிடந்து “இவன் பத்துத் தலைகளையுடைய இராவணன்: உண்மை உருவத்தை மறைத்துக்கொண்டு உன்னை வஞ்சித்து வரம் பெற வந்துள்ளான். இவனுக்கு நீ வரம் அளித்தால் பெருந்தீங் காக முடியும்' என்று தெரிவிப்பவன்போன்று தன் திரு வடியால் இராவணனுடைய பத்துத் தலைகளையும் எண் னிக் காட்டினான் என்பதாக ஒரு வரலாறு. 'இப்படிப் பட்ட எம்பெருமான் திருவேங்கடமலையில் நின்ற திருக் கோலத்தில் சேவை சாதிக்கின்றான். அவனையடையந்து
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/147
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
