குலசேகரப்பெருமாள் காட்டும் திருவேங்கடம் 路荔 யுள்ள இராமபிரானுக்கும் இராச கோபாலனுக்கும் நித்திய நைமித்திக உற்சவங்களைக் குறைவறச் செய்து கொண்டிருந்தவர். இவர், தில்லைநகர் திருச்சித்ர கூடந் தன்னுள் அரசு அமர்ந்தான் அடிசூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேன் மற்(று) அரசு தானே. -பெரு. திரு. 10:? என்று கோவிந்தராசனின் திருவடிகளைத் தலைமேல் குடுதலையே மகுடாபிஷேகமாகப் பாவிப்பவர்; பெருமா ளுடைய (இராமபிரானுடைய) இன்ப துன்பங்களைத் தமது சுக துக்கங்களாகக் கருதியதனால் இவருக்குப் 'பெருமாள்” என்ற பெயரும் வழங்கலாயிற்று. இவர் மனம் அடிக்கடி கோயில் வாசத்தையே நாடி யது. இவர் தம் தலைநகரைவிட்டுத் திரு.அரங்கத்துக்குச் சென்று பெரிய பெருமாளைச் சேவிப்பாராயின் பின்பு தலைநகருக்கு மீளுதல் அரிதென்றும், திருவரங்கத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிடுவரென்றும் கருதி அந்தப் பயணத் தைத் தடுக்க ஓர் உபாயத்தை மேற்கொண்டனர் அமைச் சர்கள். இவர் பாகவதர்களை உபசரிப்பதில் விருப்பமுள்ள வராதலால், பல பாகவதர்களை வரவழைத்து இவர் திரு. முன்பு அனுப்பலாயினர். திருமாலடியார்களைப் பூசித்த பேறு அறுபதினாயிரம் ஆண்டுக்காலம் திருமாலை ஆரா தனம் செய்த பயனுக்கு மேற்பட்டது என்ற சாத்திர உண் மையை அறிந்தவராதலால் திருவரங்கத் திருத்தலப் பய ணத்தை நிறுத்தி அடியார்களை உபசரிப்பதில் ஈடுபடலா யினர். அமைச்சர்கள் அடிக்கடி இம்முறையை மேற்கொண் டதால் இவர் ஆட்சிக்குட்பட்ட நாடெங்கும் வைணவ அடியார்களின் கூட்டம் பெருகலாயிற்று.
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/153
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
