#74 வடவேங்கடமும் திருவேங்கடமும் வாஐார் சோதி பகல் விளக்குப் பட்டிருக்கும்; நீலா ழிச் சோதி கடல் கொண்டு கிடக்கும்; வேங்கடத்து எழில் கொன் சோதி குன்றத்திட்ட விளக்காயிருக்கும் ; வேங்க 1.மே விளக்கே' (பெரி. திரு. 4.7:5) என்றல்லவா சொல் விட் போந்தார் திருமங்கையாழ்வார்? என்பது ஈட்டு சூக்தி. திருமந்திரப் பொருள்: இப்பாசுரம் கைங்கரியப் பிரதானமான திருமந்திரத்தின் பொருளைக் குறிப்பிடுவ தாகக் கொள்வர். திருமந்திரப் பொருளாவது: 'எம்பெரு மாலுக்கே உரியனான நான் எனக்கு உரியன் என்பது ஒழிய வேணும்; சர்வ சேஷியானவனுக்கே எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக வேணும்' என்பது. ஒழிவில் காலமெல்லாம் உடனாய் ம ன் னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் என்ற இதனால், நான்காம் வேற்றுமையின் பிரார்த்தனையைச் சொல்லுகின்றது. நான்காம் வேற்றுமை என்றது. "தாராயணாய என்ற பதத்திலேயுள்ள ஆய’ என்னும் நான்காம் வேற்றுமையுருபினை (சதுர்த்தியை); பிரார்த் தனையைச் சொல்லுகிறது என்றதன் பொருளை ஆய. என்கின்ற இத்தால் சென்றால் குடையாம் (முதல் திருவந்-53) என்று பொய்கையாழ்வார் கருத்துப்படி எல்லா அடிமைகளும் செய்ய வேனும் என்று அபேட்சி கின்றது', 'ஆகையால் 'வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் என்ற பிரார்த்தனையைக் காட்டு கின்றது' (முமுட்சு-105, 108) என்பனவற்றால் அறிய லாம். நாம் என்பதனால், பிரணவத்தில் சொல்லப் படுகின்ற இவ்வான்மாவிதுடைய சொரூபத்தைச் சொல்லுகின்றது; இது, 'சொல்லின் சுபாவத்தைக் கொண்டு சொன்னோம்' என்று அருளிச் செய்தருளின வார்த்தை. ஆன்மாவின் சொரூபம் - இறைவனுக்குச் சேஷமாய் (அடிமையாய்) இருக்கும் தன்மை, சேஷத்து
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/206
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
