பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

bs சடகோபன் சிந்தையில் திருவேங்கடம் I go தம்முடைய ஆகிஞ்சந்யத்தையும், சேஷத்துவத்தையும் அவனுடைய சரண்யத்துக்கு உறுப்பாகச் சொல்லிக் கொண்டு போத்தார்; இங்கு அதனையே பேற்றுக்கு .. லாகக் கொண்டு சரண் புகுகின்றார். 'அகிலகில்லேன் இதையும் : எம்பெருமான் திரு மார்பிலே நித்தியவாசம் பண்ணா நின்ற பெரிய பிராட்டி யார் இறையும் அகலகில்லேன்' என்று இதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கின்றாளாம். இதற்குக் காரணம் என்ன? போக்கியதையின் கனத்தைப் பார்த்த வாறே "ஐயோ! அகல நேர்ந்து விடுமே என்று ஐயம் உண்டாகக் கூடியது; அந்த ஐயத்தைத் தெரிவிப்பதற். காகச் சொல்லுகிறபடி' என்க. அலர்மேல் மங்கை: மலரின் மணம் ஒரு வடிவு கொண்டாற்போலத் தோன்றியவளான பெரியபிராட்டி யார் அந்த மலரில் வசிக்க விரும்பாமல் அதனைத் துறந்து விட்டுத் திருமார்பில் வந்து சேர்ந்ததற்குக் காரணம் என்ன? அந்தப் பூவைவிட மென்மைத் தன்மையுள்ள இடம் என்பதுபற்றி. உறை மார்பா: எம்பெருமானுக்கு உபாயத்துவம், உபயேத்துவம் என்ற இரண்டு தன்மைகள் உண்டானாற் போல, பிராட்டிக்குப் புருஷகாரத்துவம், உபேயத்துவமா கின்ற இரண்டு தன்மைகள் உண்டு. எம்பெருமானை ஆச்ர விக்கும் போது இவளைப் புருஷகாரமாக முன்னிட வேண் டிய இன்றியாமையாமை என்ன? குளிர்ந்த நீரிலும் கூட நெருப்புக் கிளர்ந்தாற்போல எல்லா உயிர்களையும் காப்ப தற்காகத் திருமாலை இட்டிருக்கும் அவனது திருவுள்ளத் திலே சேததன் அளவு கடந்து பண்ணும் குற்றங்கள் அடியாகச் சீற்றம் பிறப்பதும் உண்டு; அங்கனம் சீற்றம் பிறந்தால் அக்குற்றம் பொறுப்பது இப்பிராட்டிற்காக.