xix கண்ணன் தேர்த்தட்டிலிருந்துகொண்டு காண்டிட: னுக்கு அருளிய அமுதவாக்கை வியாசபகவான் பதினெட்டு இயல்களில் அமைத்து வெளியிட்டார். அதுபோல் சிறி யேனின் நூலும் பதினெட்டு கட்டுரைகளாக அமைந்தது. ஒரு பொருத்தம். இவற்றுள் முதல் நான்கு கட்டுரைகள் "வடவேங்கடம் பற்றியவை. இவற்றில் வடவேங்கடம்’ வேறு, திருவேங்கடம் வேறு என்று இலக்கியச் சான்று களுடன் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. ஏனைய பதினான்கு கட்டுரைகளும் திருவேங்கடத்தையும் அங்கு நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும் வேங்கடவாணனை யும் பற்றியவை. இவற்றைத் தொகுத்து வெளியிட்டால் வாசகர்களின் சிந்தைக்கு விருந்தாக அமைவதுடன் பக்தி உணர்வையும் தூண்டுவனவாக அமையும் என்று கருதியே வெளியிட்டேன். இதன் பயனைப் படிப்போர்தாம் மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த நூலைச் செவ்விய முறையில் அழகுற அச்சிட்டு உதவிய திரு. வெள்ளையப்பன் (அதிபர் பூரீ வெங்கடே சுவரா அச்சகம்) அடடை ஒவியம் வரைந்தும் அச்சுக் கட்டைகள் தயாரித்தும், அ.உடையை மூவண்ணங்களில் அச்சிட்டும் அதற்குக் காப்புறை (Lamination) அமைத்தும் உதவிய ஓவிய மன்னர் கலையரசர் P, N ஆனந்தன் அவர்கட்கும் இதற்கு நன்முறையில் கட்டமைத்து கற்போர் கரங்களில் கவினுறத் தவழிச் செய்த திரு. V. திருகாவுக்கரசுக்கும் என் உளங்கலந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். இந்த நூலுக்குச் சிறப்புப் பாயிர மாலை வழங்கிய பேராசிரியர் டாக்டர் அர. சிங்கரரவடிவேலன் என் தலை மாணாக்கர்களுள் ஒருவர். எல்லோருமே சாந்தியினி முனிவருக்குக் கண்ணன் மாணவனாக வாய்த்தது போல் எனக்கு வாய்த்தனர் எனக் கொள்வேன். டாக்டர் சிங்கார வேலன் 1960-61 இல் அழகப்பா ஆசிரியர் பயிற்சிக்
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/23
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
