பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 #8 வடேவங்கடமும் திருவேங்கடமும் தன்னுடைய உபதேசத்தாலே அச்சீற்றத்தைத் தணித்துத் தயையைப் பிறப்பிப்பவள் பிராட்டி, அன்றியும், உறை மார்பா' என்பதனால் பிராட்டியும் பெருமாளுடன் எப் போதும் சேர்ந்திருக்கின்றாள் என்பதை அறிவித்துக் கொண்டிருப்பதால், எச்சமயத்திலும் சேதநன் எம்பெரு மாணை ஆச்சயிக்கலாம் என்பது தேறி நிற்கும். பிராட்டியின் புருஷகாரம் அவசியம் வேண்டும் என் பதை விபவாவதார காலத்துச் செய்தியால் தெரிந்து கொள்ளலாம். இராமாவதாரத்தில் அளவு கடந்த அபரா தத்தைச் செய்து நான்முகன் கணைக்கு இலக்காய் தலை யறுப்புண்ணவேண்டிய காகம் கருணைக்கு இலக்காய் தலை பெற்றுப் போனது பிராட்டி அருகிருந்தமையாலே யாகும். அவ்வளவு அபராதம் செய்யாத இராவணன் இராமன் கனைக்கு இலக்காய் முடித்து போனது இவளது சந்நிதி இல்லாமையாலேயாகும். நிகரில் புகழாய் முதலியன: பிராட்டியின் புருஷகார பலத்தாலே எம்பெருமானுடைய சுதந்திரம் மடிந்து தலை எடுக்கும் குணங்கள் சிலவுண்டு; அந்தக் குணங்கள் "ஆச்ரயன செளகர்யா பாதகங்கள்’ எ ன் று ம், "ஆச்ரித கார்யா பாதகங்கள்’ என்றும் இருவகைப் பட்டிருக்கும், சிறிதும் அச்சமின்றி, கூச்சமுமின்றி நாம் ஆச்ரயிப்பதற்கு அதுகூலப்படுத்துகிற குணங்கள் "ஆச்ரயன செளகர்யா பாதகங்கள் ஆகும். ஆச்ரயித்த பிறகு காரியம் தலைக்கட்டும்படி செய்யும் குணங்கள் "ஆச்ரித கார்யா பாதகங்கள்’ ஆகும். ஆச்ரயிக்கப் புகும் சேததன் தன் குற்றங்களைப் பார்த்து அஞ்சும்போது தோஷ்போக்யத்துவரூபமான வாத்சல்யத்தை நினைத்து அந்த அச்சம் தீரலாம். பாசுரத்தில் நிகரில் புகழாய்” என்ற தொடர் வாத்சல்யத்தைக் குறிப்பிடுகின்றது. ஈசுவரன் நம் காரியம் செய்வானோ? செய்யானோ? என் கின்ற ஐயம் தோன்றும்போது இழவுபேறு தன்னதாம்