பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடகோபன் சிந்தையில் திருவேங்கடம் 薰尊梦 படியான சுவாமித்துவத்தை நினைத்து அந்த ஐயம் சே லாம். டாசுரத்தின் உலகம் மூன்றுடையாய்' என்ற தொடர் சுவாமித்துவத்தைக் குறிப்பிடுகின்றது. உபய விபூதிக்கும் தலைவனாக இருக்கும் பெருமைக்குப் பிரகாச மான சுவாமித்துவத்தைக் கண்டு, தன்னுடைய கீழ்மை யான தன்மையை அதுசந்தித்து, அகல நினைக்க நேரும் போது தாழ நின்றவர்களுடன் புரையறக் கலக்கும் இயல்பான செள சீல்யத்தை நினைத்துத் தெளிவு பெற லாம். பாசுரத்தின் என்னை ஆள்வானே என்ற தொடர் செள சீல்யத்தைக் குறிப்பிடுகின்றது. இந்திரியங்களுக்கு எட்டாதவனான அவனை நாம் எப்படி ஆச்ரயிப்ப தென்று பின்வாங்க நினைக்கும்போது தன் வடிவைக் கண்ணுக்கு இலக்காக்கும்படியான செளலப்பியத்தை தினைத்துத் தெளியலாம். பாசுரத்தின் திகளில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே’ என்ற தொடர் செளலப்பியத்தைக் குறிப்பிடுவதாகும். இந்தப் பொருள் சிறப்புகளும் இன்னும் பலதத்துவக் கருத்துகளும் ஈட்டில் மிக அருமையாக அருளிச் செய்யப் பெற்றுள்ளன. புகலொன்றிலா அடிவேன்: ஆகிஞ்சத்யமும் (=கைமுதல் இல்லாமை அநயகதித்திவமும் (=வேறு கதி இல்லாமை) பிரபத்திக்கு அதிகாரமாகையாலே அவை இரண்டையும் குறிக்கின்றது. இது. "புகல் ஒன்று இல்லா என்றதனால் பிரபத்திக்கு அங்கமான ஆகிஞ்சக் யமும், "அடியேன்” என்றதனால் அநந்யகதித்துவமும் சொரூபப் பிரகாசமான அநந்யார் ஹசேஷத்துவமும் சொல்லுகின்றது. "அடியேன்” என்ற சொல்லுக்கு நேர்பொருள், அதந்யார் ஹ. சேஷத்துவம். பொரு எாற்றலால் போந்த பொருள் அநந்யகதிததுவம், ஆகிஞ்சந்யமாவது, வேறு உபாயங்கள் இன்மை. உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன். ஆக இவ் வளவாலும் துவயத்தின் முதல் கண்டம் அதுசந்திக்கப்